பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர். யார் பாருங்க (ஆனா, கம்மியான ஓட்டு அவருக்கு தான் வந்திருக்கு)

0
582
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதமே கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் சீசனில் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதிலும் ஆண்களை விட பெண்கள் தான் நிகழ்ச்சியில் அதிகம் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் வெளியேறி இருந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டையும் கலவரமும் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகளுடன் உள்ள ஒருவரை வார வாரம் வெளியேற்றுவார்கள்.அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியே போக இருக்கிறார்கள் என்ற தகவல் சோசியல் மீடியாவில் கசிந்து உள்ளது. இதுவரை நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நதியா சாங்க், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : ‘மாரியம்மாவா இது’ – திறந்துவிட்ட பட்டன், சட்டையை ஒரு பக்கம் இறக்கி சார்பட்டா நடிகை கொடுத்த போஸ்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்தது. இதில் இமான் அண்ணாச்சி, பவானி, மதுமிதா ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தார்கள். அதோடு இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்பட்ட டாஸ்கில் கூட இவர்கள் சரியாக விளையாடவில்லை என்று புகாரும் எழுந்து இருந்தது.

அதன்படி தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மதுமிதா தான் குறைந்த வாக்குகளுடன் வெளியே போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. உண்மையில் பல தனியார் வலைதள ஓட்டிங்கில் அபிநய்க்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
Advertisement