முதல் வாரத்திலேயே நாமினேட் ஆன 16 பேர் – யார் யாரை நாமினேட் செய்துள்ளனர் பாருங்க. (அதிக ஓட்டு இவருக்கு தான்)

0
635
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் ஜாலியாக தான்இருந்து வந்தனர். அதேபோல வீட்டில் பெரிதாக சண்டையோ சர்ச்சையை எழவில்லை. இடையில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவருக்கு மட்டும் லேசாக சண்டை எழுந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதுவும் சமாதானத்தில் முடிந்துவிட்டது.

முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக திருநங்கையான நமிதா மாரிமுத்து பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை நமிதா மாரிமுத்து சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக அறிவித்தனர்.

- Advertisement -

மேலும், நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததாக கூறப்பட்டது. அவரை பிக் பாஸ் குழு எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அது பலனும் அளிக்காததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூட கூறப்பட்டது.

கடந்த வாரம் முதல் வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேசன் நடைபெற்றது இதில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரை செல்வியை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதில் தாமரை செல்வி மற்றும் பாவனி தவிர மீதமுள்ள 16 போட்டியாளர்களும் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் யார் யாரை நாமினேட் செய்தனர் என்பதை பாப்போம்,

அக்ஷரா – இசைவாணி, சுருதி
அபிஷேக் – அக்ஷரா நாதியா
அபிநய் – இசைவாணி, ராஜு
பிரியங்கா – அக்ஷரா ஐக்கி
சின்ன பொண்ணு – இசைவாணி, அண்ணாச்சி
வருண் – இசைவாணி, சின்னப்பொண்ணு
இசைவாணி – சின்ன பொண்ணு, அண்ணாச்சி
சிபி – அண்ணாச்சி, இசைவாணி
அண்ணாச்சி – அபிநய், சிபி
மதுமிதா – இசைவாணி, நிரூப்
சுருதி – அக்ஷரா, நிரூப்
நிரூப் – அபிநய், வருண்
ஐக்கி – அபிஷேக், நிரூப்
ராஜு – அபிநய், பிரியங்கா
நாதியா – நிரூப், அண்ணாச்சி
பாவனி – நிரூப், சிபி
தாமரை – சின்னப்பொண்ணு, மதுமிதா

என்று மொத்தம் 16 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக இசைவாணியை 6 பேர் நாமினேட் செய்துள்ளனர். அவரை தொடர்ந்து,

இசைவாணி – 6
நிரூப் – 5
அண்ணாச்சி – 4
சின்ன பொண்ணு – 3
அபிநய் – 3
அக்ஷரா – 3
சிபி – 2
சுருதி – 1
மதுமிதா – 1
நாதியா – 1
ராஜு – 1
ஐக்கி – 1
அபிஷேக் – 1
அபிநய் – 1
பிரியங்கா – 1
வருண் – 1 என்று வாக்குகளை வாங்கி இருக்கின்றனர்.

Advertisement