இவங்க தான் நமீதா சொன்ன அவர்களின் கொடுமைகார அம்மா, அப்பா. அவரது தந்தைக்கு காலில் இப்படி ஒரு பிரச்சனையாம்.

0
2052
namitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3 ஆம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்களும் 10 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் துவங்கிய முதல் நாளே முதல் டாஸ்க்காக கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கில் நமீதா மாரிமுத்து பேசியது பலரை கண் கலங்க வைத்தது. சிறுவயதிலேயே தனக்கு பெண் தன்மை இருப்பதை உணர்ந்த நமிதா பெண்ணாக மாற ஆசைப்பட்ட உள்ளார் ஆனால் அதை பெற்றோர்கள் ஏற்க மறுத்து இருக்கிறார்கள் இதனால் பலமுறை அவரை அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள் மேலும் இவரை மறுவாழ்வு மையத்தில் கூட சேர்த்து இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : கடந்து வந்த பாதை டாஸ்கில் தனக்கு திருமணமானதை மறைத்த இசைவாணி – இவர் தான் அவரின் கணவர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இவரை கொலையோ செய்து விடுவதாக கூட கூறி இருக்கிறார்கள். ஆனாலும் இவர் பெண்ணாக வாழவே ஆசைப்பட்டு இருக்கிறார் எவ்வளவோ கஷ்டங்களை கடந்து 18 வயது ஆகும் வரை காத்திருந்த இவர் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்து நீதிமன்றத்தில் இனி சுதந்திரமாக வாழலாம் என்ற தீர்ப்பையும் பெற்றிருக்கிறார் அதன் பின்னர் தனியாக வாழ்ந்து பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு திருநங்கை மாடலாக நிலை நிறுத்தியிருக்கிறார் நமிதா மேலும் இவருக்கு பல திருநங்கைகள் உதவி செய்திருக்கிறார்கள்.

திருநங்கைகள் என்றால் பாலியல் தொழில் செய்வார்கள் இல்லை பிச்சை எடுப்பார்கள் இந்த இரண்டு விஷயத்தை மட்டும் தான் சொல்வார்கள். அவர்கள் அப்படி ஆவதற்கு காரணம் பெற்றோர் மட்டும் தான். எங்களுக்கும் மனசு இருக்கு, எங்களுக்கு படிப்பு மட்டும் கொடுத்தால் போதும் நாங்கள் முன்னேறிவிடுவோம் என்று உருக்கமாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நமிதாவின் உண்மையான பெற்றோர்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவரது தந்தை கால் ஊனமுற்றவராம், ஒருவர் கைத்தாங்கலாக பிடித்து சென்றால் தான் அவரால் நடக்கவே முடியுமாம்.

-விளம்பரம்-
Advertisement