பிக் பாஸ் 5வில் இரண்டாம் இடத்தை பிடித்த பிரியங்காவிற்கு கிடைத்த மொத்த பணம் எவ்ளோ தெரியுமா ?

0
617
biggboss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளுக்கு இணையாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அதிலும் விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடி உள்ளார். அவருக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் என்றால் பிரியங்கா தான். தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவர் தொகுப்பாளினியாக தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘கால் சரியானதும் ஆட்டம்’ – சாமி சாமி பாடலுக்கு ஆட்டம் போட்ட யாஷிகா. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

பிரியங்கா பற்றிய விவரம்:

பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்க்கு பின்னரும் பிரியங்கா தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். மேலும், இந்த வருடம் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிக் பாஸ் சீசன் 5:

இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களம் இறங்கி இருந்தார்கள். அதிலும் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பினாலே:

அதிலும் இந்த முறை முக தெரியாத நபர்கள் பலபேர் இருந்ததார்கள். முகம் தெரிந்த நபர் என்றால் சில தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல சர்ச்சைகளும் பிரச்சனைகளிலும் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மதியம் பிரபலமாக இருந்தார். பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

பிரியங்கா சம்பளம்:

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று தான் நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா சம்பாதித்த மொத்த பணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரத்திற்கு பிரியங்காவிற்கு இரண்டு லட்சம் என்று சொன்னார்கள். இவர் கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டில் 15 வாரம் இருந்தார். அதனால் 15 * 2 laks = 30laks. ஆகமொத்தம் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்பாதித்த பணம் 30 லட்சம். இதில் 30% டாக்ஸ் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement