பிக் பாஸ் துவங்கும் தேதி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் டிவி. இம்முறை என்னென்ன மாற்றம் ?

0
339
biggboss6
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர். இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6:

ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதேபோல் கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த தகவல்:

அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். அதே சமயம் டிஸ்னி பிளஸ் ஸ்டார் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

சிப்பிக்குள் முத்து:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விஜய் டிவி முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் இரவு 10 மணி முதல் 11 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்பது அனைவரும் அறிந்து ஒன்று. ஆகையால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலைத் தான் முடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த சீரியல் ஒரு தெலுங்கு சீரியல்லின் ரீமேக் ஆகும். தனது தங்கை காதல் நிறைவேறுவதற்காக மனநிலை சரியில்லாத அண்ணனை சீரியலின் நாயகி திருமணம் செய்து கொள்கிறார்.

முடிவடைய இருக்கும் சீரியல்கள்:

இந்த சீரியல் தொடங்கிய நாளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு தற்போது சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதால் இந்த சீரியலை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பாரதி கண்ணம்மா தொடரும் இறுதி கட்டத்தில் இருப்பதால் இந்த சீரியலும் கூடிய விரைவில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Advertisement