இந்த வார நாமினேஷன் – நீங்கள் எதிர்பார்த்த நபர் நாமினேஷனில், ஆனால் அவர் எஸ்கேப்

0
306
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். பின் அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர். பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தனர். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள்.இதற்கிடையில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற்றுஇருந்தது. அதில் நாமினேட் ஆனவர்கள் தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் ஆகிய 6 பேரில் இறுதியில் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா வெளியேறி இருந்தார்.

இதனால் மீதம் தினேஷ், கூல் சுரேஷ், அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் இந்த வார நாமினேஷனில் தொடர்ந்தனர். இதில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. கடந்த சில வாரங்களாகவே கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது.

-விளம்பரம்-

கூல் சுரேஷ் இப்படி செய்ததால் இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷனில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவரை சேனலே வெளியில் அனுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சனிக்கிழமை எலிமினேஷன் நடந்தாலே அது டபுள் ஏவிக்ஷனின் அறிகுறி தான். எனவே இந்த வாரமும் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் யாரும் வெளியேறவில்லை.

கடந்த வாரமே நிக்சன் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தார். மேலும், பல தனியார் வலைத்தளங்களில் நடந்து வந்த ஓட்டிங்கிலும் அவருக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்தது. ஆனால், ஆனால், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருக்கிறது. இதில் ரவீனா நாமினேஷனில் வந்ததாலும் அனைவரும் எதிர்பார்த்த நிக்சன் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

Advertisement