இந்த நரி கூட்டம் ஏன் அமைதியா இருக்கு, அதுல ஒன்னு ஓடய போது – ஆருடம் சொன்ன தினேஷ் மற்றும் அர்ச்சனா

0
173
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கு ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது. இதில் விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரை நாமினேட் செய்தார்.பின் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விஷ்ணு நாமினேட் செய்த மாயா, அக்ஷயா உட்பட அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா, மணி, பிராவோ ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

- Advertisement -

தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்க பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் மேலும் மூன்று Wild Card போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதால் தற்போது மேலும் ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. இது ஒருபுறம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் மூவர் தான் Wildcard போட்டியாளராக வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விஜய் வர்மா, அனன்யா, வினுஷா ஆகிய மூவர் உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

முதல் பூகம்ப டாஸ்க் கொடுக்கட்டது. இதில் தினேஷ் மற்றும் விஷ்ணு பங்கேற்று இருந்தனர். ஆனால், இருவரும் இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து மணி மற்றும் நிக்சன் இந்த டாஸ்கில் பாகேற்றனர். இதிலும் இருவரும் டாஸ்கில் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து ப்ரவரோ மற்றும் விக்ரம் பங்கேற்று இருந்தனர். இதில் இருவரும் தோற்றனர். முதல் பூகம்ப டாஸ்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோற்றதால் இந்த வார இறுதியில் Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைவது உறுதியாகிவிட்டதாக பிக் பாஸ் அறிவித்தார்.

மேலும், இனி மீதம் இருக்கும் இரண்டு பூகம்ப டாஸ்கை பொறுத்து எத்தனை Wild Card என்பது உறுதியாகும் என்றும் பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடைசி பூம்பாங்க டாஸ்க் கொடுக்கட்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் தோற்றால் மூன்று வைல்ட் கார்ட் உள்ளே வருவது உறுதியாகிவிடும். தற்போது வெளியாகி இருக்கும் மாயா குழுவை பற்றி தினேஷ் மற்றும் அர்ச்சனா பேசி இருக்கிறார்கள்.

Advertisement