விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை நிறைவு செய்து இறுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.
அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனி பேட்டி ஒன்றில் இவர் பாடிய ‘வெயிலோடு விளையாடி’ பாடலை பலரும் வச்சி செய்தனர்.
பிக் பாஸில் கலந்துகொண்ட இரண்டாம் நாளிலேயே இவர் தன் அம்மா மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பேசி அழுதது பெரும் கேலிக்கு உள்ளானது. அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் முன்னுக்கு பின்னாக தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் தான் நேற்றய நிகழ்ச்சியில் கமல், யாரெல்லாம் இதற்க்கு முன் நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை பார்த்து இருகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.
அப்போது அபிஷேக் கையை தூக்கி நான் பார்த்ததே இல்லை சார் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அபிஷேக், பிக் பாஸ் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஊருக்கே தெரியும் உங்கள கேமரா வச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்கனு, ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு CM ஆகணும்னு நீ பண்ற வேலை இருக்கே முடியலடா என்று பேசி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வர அபிஷேக் ராஜாவை எப்படி இவ்ளோ கூசாம பொய் சொல்ற என்று வச்சி செய்து வருகின்றனர்.