சூப்பர் சிங்கரில் நடந்தது போல தான் தர்ஷனுக்கு நடந்துள்ளது.! கொந்தளிக்கும் இலங்கை ரசிகர்கள்.!

0
1481
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.அதிலும் கடந்த வாரம் நடந்த எலிமினேஷனில் தர்சன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். முடிவாக கமல்ஹாசன் அவர்கள் இது மக்கள் ஓட்டின் மூலம் வந்த முடிவு என்று சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-
tharshan

ஆனால், என்ன? நடந்தது என்று ஒன்றும் புரியாத அளவிற்கு மக்கள் உள்ளனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியே சென்றதைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் மட்டும் இருந்தார்கள். மேலும், கவின் சென்றுவிட்டார் யாரும் வெளியே போக மாட்டார்கள் என்று பலரும் நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால்,கமல்ஹாசன் அவர்கள் எவிக்ஷன் இல்லை என்று நினைப்பது தவறு என்று கூறினார்.இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம்.

- Advertisement -

மேலும், மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தது தர்ஷன் தான் இந்த பிக் பாஸ் சீசன் 3ன் வின்னர். ஆனால், மலையே புரட்டிப் போடும் அளவிற்கு கடந்த வாரம் எலிமினேட் இருந்தது. தர்ஷன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. பிக்பாஸ் வீட்டில் நடந்த எல்லா போட்டிகளையும் வெற்றிகரமாக செய்து முடித்தவர் தர்ஷன் . அப்படி பார்த்தால் இந்த போட்டியில் இறுதி கட்டத்திற்கு செல்ல வேண்டியதும் தர்ஷன் தான்.இந்த பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்பும் தர்ஷனுக்கு உள்ளது.

ஆனால், அவரை திடீரென்று எலிமினேட் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்று இலங்கை ரசிகர் ஒருவர் கூறினார். மேலும், விஜய் டிவி நிறுவனம் எப்போதுமே இந்த மாதிரி தான் செய்து கொண்டு வருகின்றது என்றும் கூறினார். இவர்கள் எப்பவுமே பாரபட்சமாக தான் பார்த்துக் கொண்டு வருகிறார்கள் என்று கூறியது போல இருந்தது அவருடைய பேச்சு.அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட இதற்கு முன்னால் இப்படித்தான் நிகழ்ந்தது என்று கூறியிருந்தார். மேலும், கவின் தானாகவே பிக் பாஸ் வீட்டை வீட்டு வெளியே போனதனால்தான் லாஸ்லியா உள்ளே இருக்கிறார், இல்லை என்றால் லாஸ்லியா தான் போய் இருப்பார் என்றும் கூறியிருந்தார் .

-விளம்பரம்-

எப்பவுமே இப்படிதான் ஏமாற்றுகிறார்கள் என்று கொந்தளிப்புடன் கோபத்துடனும் கூறினார்.இலங்கை ரசிகர் கூறியதற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் எழுப்பிய வண்ணம் உள்ளனர் நெட்டிசன்கள். மேலும் தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3 இன் இறுதி கட்ட பைனலில் விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.மேலும்,இந்த பிக் பாஸ் சீசன் 3 இல் வெற்றி பெற்றாறோ ? இல்லையோ? ஆனால் தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் தர்ஷன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement