விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட தர்ஷன் மீது மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷனின் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று சனம் ஷெட்டி ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், பேட்டியில் பங்கேற்ற தர்ஷன், சனம் ஷெட்டி ரம்யா – சத்யா திருமணத்தின் போது அவரது முன்னாள் காதலருடன் ஒன்றாக இருந்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் அஜய் இதுகுறித்து பேட்டியில் பேசியுள்ளார்.
இதையும் பாருங்க : நம்ம வீட்டு பிள்ளை பட நடிகை அனு இம்மானுவேல் வாங்கிய கார். வைரலாகும் புகைப்படம்.
அந்த பேட்டியில் பேசியுள்ள அஜய், எனக்கு சனம் ஷெட்டியை 6 வருசமாக தெரியுமா 3 வருடமாக காதலித்தோம் ஆனால், 2 வருடமாக நாங்கள் பேசிக்கொள்வது இல்லை. நாங்கள் இருவரும் பிரிந்த போது கூட சண்டை கூட போடவில்லை. இருவரும் நன்றாக பேசிவிட்டு முடிவெடுத்த தான் பிரிந்தோம். அன்று சத்யாவின் திருமணத்தின் போது தான் சனமை மீண்டும் பார்த்தேன். பின்னர் இருவரும் சாதாரணமாக பேசிகொண்டு நண்பரை ஷேர் செய்து கொண்டோம். மேலும், தர்ஷன், நாங்கள் இருவரும் தனியாக இருந்தது போல சொன்னார்.
அன்று இரவு பங்ஷனை முடித்து விட்டு கில்டன் ஓட்டலுக்கு சென்றோம். அந்த ஹோட்டலை கூட சத்யா தான் புக் செய்து இருந்தார். ஆனால், அங்கு நாங்கள் மட்டும் தனியாக போகவில்லை அதே ஹோட்டலில் 20 பேர் மேல் ஒன்றாக தான் தங்கினோம். அதன் பின்னர் இரவு 2 மணி அளவில் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நாங்கள் காதலித்தது உண்மை தான் ஆனால், தர்ஷனை காதலித்த பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை என்று கூறியுள்ளார் அஜய்.