பேசிக்கொண்டு இருக்கும் போதே தோள் மீது கைவைத்த அசல் – ஜனனி விட்ட அந்த லுக் ஆயிரம் அர்த்தம் சொல்லும். வைரலாகும் வீடியோ.

0
555
asal
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொலார் அத்துமீறி நடப்பதை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது ஜனனியிடமுன் அசல் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாம் வாரத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார்.

- Advertisement -

அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ‘லைஃப் ஆப் பேச்சுலர்’ பாடலை எழுதி இருக்கிறார். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். திலும் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார். ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது. விக்ரமனனுடன் குயின்சி பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை செய்வது தவறு என்றெல்லாம் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள்.பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு அசல் கடலை போட்டு இருந்தார். அதே போல மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை நொண்டியது என்று தன் தடவல் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் அசல்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அசல் நிவாஷினி மடியில் அமர்ந்து அவருடன் கொஞ்சி பேசி இருந்தார். இப்படி இவர் பெண்களிடம் அத்து மீறி நடந்துகொள்வது பலரை முகம் சுழிக்க வைத்து வருகிறது. இதனால் இவரை ரெட் கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர் ஜனனியிடமும் அடிக்கடி எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட கை கொடுப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் சாக்கில் ஜனனியிடம் தன் தடவல் வித்தையை தொடர்ந்தார் அசல். இப்படி ஒரு நிலையில் இவர் நேற்று ஜனனி டக்கென்று தோள் மீது கைபோட்டார். இதை எதிர்பாராத ஜனனி, ஒருகனம் அசலை லுக்கு விட உடனே கையெடுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வர நெட்டிசன்கள் பலர் சம்மந்தபட்ட பெண்களே எதுவும் சொல்லவில்லை என்ற கூட்டத்திற்கு ‘ஜனனி ஏன் அப்படி முறைத்தார்’ என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement