‘இவங்கன்னாலே எல்லாருக்கும் எலக்காரம் தான்’ – டாஸ்க் என்ற பெயரில் கொடுமைபடுத்தப்பட்ட போட்டியாளர். எச்சரித்த பிக் பாஸ். வீடியோ இதோ.

0
579
julie
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வாரத்தை தொடங்கி உள்ளது . தமிழில் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். அதை தொடர்ந்து இந்த மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதோடு கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் எலிமினேட் ஆனவர்கள்:

இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். பின்னர் கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி வெளியேறினார். தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இந்த நான்காவது வாரம் தொடக்கத்தில் ஏஞ்சல் மற்றும் demon என்ற டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள்.

இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஓரணி ஏஞ்சல்ஸ் ஆகவும் மற்றொரு demon ஆகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சினேகன், ஜூலிக்கு செய்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், டாஸ்க்கில் ஜூலி முகம், கைகள் எல்லாம் கட்டி வெளியே வெயிலில் உட்கார வைத்திருக்கிறார்கள். அப்போது சினேகன் சுடு தண்ணியை எடுத்துக் கொண்டு வந்து ஜூலியின் முகத்தில் ஊற்றுகிறார். சூடு தாங்க முடியாமல் ஜூலி கத்துகிறார். இதை பார்த்த பிக்பாஸ், இந்த மாதிரி செய்யாதீர்கள் சினேகன், முகத்தைக் காட்டாதிர்கள், இப்படி எல்லாம் பண்ண கூடாது என்று எச்சரிக்கை கொடுக்கிறார்.

-விளம்பரம்-

ஜூலி மீது சூடு தண்ணீர் ஊற்றிய சினேகன்:

உடனே சினேகன், இது சூடு என்று எனக்கு தெரியவில்லை. பைப் திறந்த உடனே தண்ணி வந்தது அப்படி எடுத்து வந்துவிட்டேன் என்று சமாளிக்கிறார். இப்படி சினேகன் செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகனை வறுத்து எடுத்து வருகிறார்கள். என்ன தான் ஜூலி தவறு செய்திருந்தாலும் அவர் திருந்தி இந்த முறை பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். சீசன் ஒன்றில் ஜூலி செய்த சில செயல்களால் இன்னும் ஜூலியை நம்பாத பலரும் அவரை தாக்கி பேசுகிறார்கள்.

சினேகனை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்:

எந்த விஷயம் இருந்தாலும் ஜூலி தான் என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது எண்ணம் திணிக்கப்பட்டிருக்கிறது. இதை மாற்றுவதற்காக ஜூலியும் பல வழிகளில் போராடி வருகிறார். அந்த வகையில் இன்று சினேகன் செய்தது மிகவும் தவறான ஒன்று. இதே ஜூலி இடத்தில் வேறு யாராவது இருந்தால் இந்த மாதிரி எல்லாம் செய்ய ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். இருந்தும் ஜூலி அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சுடு தண்ணி ஊற்றுவது எல்லாம் ரொம்ப கொடூரமான செயல் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். பலரும் ஜூலிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement