‘ஏற்கனவே அப்பா என்னிடம் பேசுறதில்லை, நீங்க வேற போட்டு கொடுக்குறீங்க’ – கேள்வியால் புலம்பிய வனிதா. அப்படி என்ன கேள்வி பாருங்க.

0
677
vanitha
- Advertisement -

சமீப காலமாகவே எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார். அதற்கு பிறகு இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-

மேலும், வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. அதோடு இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தொடங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். மேலும், முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் வனிதா சண்டை போட்டு இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளன்று இரண்டாவது டாஸ்க்கை பிக் பாஸ் ஹவுஸ் மேட்டுக்கு கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் குடிக்கணும் – கடிக்கணும் டாஸ்க்:

அதில் ஒவ்வொரு போட்டியாளரும் பிக் பாஸ் கொடுத்த கேள்வியை கேட்பார்கள். அதில் கேள்வி கேட்கும்போது ஆமாம் என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்கணும், இல்லை என்றால் சிப்சை கடிக்கணும். அதாவது குடிக்கணும் – கடிக்கணும் இது தான் டாஸ்க். இதில் நிறைய கேள்விகள் எல்லாம் இருந்தது. எல்லோருமே கேள்விக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்லிட்டு வந்தார்கள். ஆனால், வனிதா மட்டுமே சம்பந்தமே இல்லாத மாதிரி விளையாடி இருந்தார். பின் கேட்கும் கேள்விகள் எல்லாத்துக்கும் மாத்தி மாத்தி பதில் சொல்லி சிப்சை மட்டும் சாப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

கலவரத்தை ஏற்படுத்திய வனிதா:

அதுமட்டும் இல்லாமல் காண்டமை பலூன் மாறி ஊதி இருக்கீங்களா? என்று கேட்டார்கள். உடனே வனிதா இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது. இதுக்கு தான் இந்த விளையாட்டில் நான் வரமாட்டேன் என்று சொன்னேன். குழந்தைகளெல்லாம் பார்க்கிறார்கள். ஏன் இப்படியெல்லாம் பண்ணுகிறீர்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று வனிதா கொந்தளித்து எல்லோரிடமும் சம்மந்தமே இல்லாமல் சண்டை போட்டு இருந்தார். இந்நிலையில் இந்த டாஸ்கில் முதல் கேள்வியே உங்கள் அப்பாவின் சரக்கை திருடி குடுத்திருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அதற்கு வனிதா கூறியிருப்பது, என் அப்பா ஏற்கனவே என்னிடம் பேசுவதில்லை.

தன் அப்பாவை பற்றி சொன்ன வனிதா:

நீங்க வேற போட்டு தரீங்களா? என்று காமெடியாக கேட்டார். இப்படி வனிதா சம்பந்தமே இல்லாமல் விளையாடி இருந்தார். அதுமட்டுமில்லாமல் வனிதாவிடம் அவர் அப்பா, அக்கா,தங்கை,தம்பி என யாரும் பேசுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கெல்லாம் காரணம் அவருடைய வாய் என்று சொல்லலாம். இப்படி ஆரம்பமே அமர்க்களம் என்று சொல்லும் வகையில் வீட்டில் நுழைந்தவுடனே சண்டை சச்சரவில் வனிதா இறங்கி இறக்கிறார். அதுமட்டுமில்லாமல் முதல்நாளே பிக் பாஸ் வீட்டில் நாமினேட் செய்யச் சொல்லி இருந்தார்கள். அதில் பலரும் வனிதா உடைய பெயர் தான் அதிகம் சொல்லி இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டுமில்லாமல் வெளியவும் பல பேர் வனிதா பெயர் தான் சொல்லி வருகிறார்கள். முதல் வாரத்திலேயே வனிதா வெளியே செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement