பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 5 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.
பணப்பெட்டி டாஸ்க் :
மேலும், நேற்றய நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விசிக பிரபலம் விக்ரமன் :
ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர். இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினரும் ஜார்னலிஸ்டுமான ஒரு நபர் கலந்துகொண்டு இருப்பது இதுவே முதல் முறை. அவர் தான் விக்ரமன். தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார்.
This is not a game show anymore. There’s no value for people who play this game sincerely without any political/PR support.
— Yaaro 🤔 (@lostsoulheree) January 18, 2023
All you have to do is throw some political words here & there. Ask your party head to campaign for you outside 👎🏽#PoliticsVellum #BiggBossTamil6 https://t.co/lFCQXpRvPm
மக்கள் மனதில் இடம்பிடித்த விக்ரமன் :
ஆனால் போக போக தான் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களை போல செய்து நியத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதே போல பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்து வருகிறார்.
இறுதி வாரத்தில் விக்ரமனுக்கு நேரடி ஆதரவு :
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கும் விக்ரமனுக்கு முதன் முறையாக நேரடியாக தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் திருமாவளவன் ‘Bigboss-இல் நடைபெறும் தேர்வில் போட்டியிலிருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். Hostar வழி வாக்களித்து அவரைத் தேர்வு செய்வோம்.- தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக’ என்று பதிவிட்டுள்ளார்.
வனிதா கண்டனம் :
இப்படி ஒரு நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கும் வனிதா ‘இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்… ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யும், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்கள் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும் ? மிகவும் புத்திசாலித்தனமான அரசியல் நாடகம், பொதுமக்களின் அன்பு மற்றும் பாசத்துடன் விளையாடுவதற்கு மைண்ட் கேமைப் பயன்படுத்துகிறார்’
விக்ரமன் வெற்றி பெற்றால் :
அரசியல் நோக்கங்களுக்காக. கமல்ஹாசன் தனது கட்சிக்கோ வேட்பாளருக்கோ வாக்களிக்கவோ அல்லது தனது கட்சிப் போட்டியாளரான சினேகனை ட்விட்டரில் ஆதரிக்கவோ கேட்பதில்லை.. விக்ரமன் வெற்றி பெற்றால் அது அரசியல் ஆதரவு மற்றும் சமூக ஆதரவால் மட்டுமே, பார்வையாளர்கள் அல்லாத வாக்குகள்