வாத்துனு கலாய்த்த கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த வனிதா.! இவங்ககிட்ட ஜெயிக்க முடியுமா.!

0
1766
vanitha-kasturi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் கஸ்தூரி ஆசிரியராகவும் சேரன் தலைமை ஆசிரியகராவும், மற்ற போட்டியாளர்கள் கிண்டர் கார்டன் மாணவர்களாகவும் நடித்தனர். இந்த டாஸ்கின் போது கஸ்தூரி வனிதாவை வாத்து வனிதா வாங்க என்று கூறினார். இதனால் வனிதா கொஞ்சம் கண்டாகவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் வனிதா மற்றும் கஸ்தூரி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பேசிய வனிதா நீங்கள் உள்ளே சொன்ன விஷயம் என்னை கலாய்ப்பது போல இருந்தது என்று கஸ்தூரியிடம் சொன்னார். அதற்கு கஸ்தூரியோ நான் கலாய்க்கவில்லை வாத்து என்ற சொல்லை இரண்டு முறை கூறியது இரட்டை பொருளை கொண்டது என்று ஏதேதோ மழுப்பி பேசினார்.

- Advertisement -

அதன் பின்னர் கூட வனிதா மிகவும் பொறுமையாக சரி, இதை விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால், இந்த விஷயத்தை மற்ற போட்டியாளர்களிடம் பஞ்சாயத்து வைத்தார். இதனால் கடுப்பான வனிதா இப்போது முடிந்து போன விஷத்தை எதற்காக பஞ்சாயத்து செய்கிறீர்கள் என்று பேசத் தொடங்கினார்.

அதன் பின்னர் சொல்லவா வேண்டும், நீங்கள் என்ன என்னை குண்டு என்று சொல்கிறீர்களா. நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா, ஏனக்கு 18 வயதில் குழந்தை இருக்கிறது என்னை பார்த்தல் அப்படியா தெரிகிறது என்று கூறினார். அதற்கு கஸ்தூரியோ நான் உங்களை கலாய்க்கவில்லை என்று சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத வனிதா, நீங்கள் எப்படி கலாய்ப்பீர்கள் நீங்கள் யார் என்றெல்லாம் நான் முழுதாக தெரிந்துவிட்டு தான் வந்திருக்கிறேன் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement