கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது வனிதா தான். சொந்த மகளையே கடத்திய விவகாரத்தில் வனிதா கைது செய்யபடுவர் என்று செய்திகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த அனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார் தற்போது ராஜன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
இதையும் பாருங்க : நேத்து மோகன் வைத்யா என்னவெல்லாம் அமர்க்களம் பண்ணி இருக்கார்.! நீக்கப்பட்ட காட்சி.!
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தெலங்கானாவில் வசித்து வந்த ஜெயந்திகாவை வனிதாசென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று போலீசார் வணிதாவிடம் பிக் பாஸ் வீட்டில் விசாரணை நடத்தினர். ஆனால், வனிதாவோ குழந்தையை தான் கடத்தவில்லை அவளை நான் பத்திரமாக என்னுடன் வைத்துளேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் வனிதாவின் மகள் பல ஷாக்கிங் உண்மைகளை கூறியுள்ளார். அதில் தன்னை யாரும் கடத்த வில்லை என்றும் அப்பாவின் வீட்டில் நான் பாதுகாப்பாக இல்லை அவர் தினமும் குடித்துவிட்டு என்னை கொடுமை செய்வார் அவருடன் இருக்கும் நண்பர்கள் எனது வீட்டிற்கு வந்து குடிப்பார்கள். மேலும் ,குளித்து விட்டு என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்கள் அந்த வீட்டில் உள்ள ஒரு பெண் என்னை படுக்கை அறையிலிருந்து வெளியே தள்ளி விட்டு வெளியில் சொல்ல முடியாத பலவற்றை செய்துள்ளார்.
மேலும்,எனக்கு அப்பாவுடன் போக பிடிக்கவில்லை என்று கூறியுள்ள அந்த சிறுமி தனது அப்பாவை பார்க்க விரும்பவில்லை என்றும் போலீஸ் விசாரணையில் தெளிவாககூறியுள்ளார். எனவே, குழந்தையின் விருப்பபடியும் குழந்தையின் பாதுகாப்பு கருதியும் குழந்தை அம்மாவிடமே வளர வேண்டும் என்று வனிதாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், குழந்தை பத்திரமாக இருக்கிறது என்று உணர்த்த வனிதாவின் மகளுடன் இருக்கும் புகைபடத்தை வனிதாவின் வழக்கறிஞ்சர் வெளியிட்டுள்ளார்.