இரண்டு வருடத்திற்கு பின்னர் மீண்டும்.! ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் பிகில் சத்தம் கிழிய போகுது.!

0
2505
Bigil
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கபட்டுள்ளது. 

-விளம்பரம்-

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் என்ற மகன் கதாபாத்திரத்திலும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

இதையும் பாருங்க : தனக்கு நடந்த கொடுமையை போலீசில் சொன்ன வனிதாவின் பத்து வயது மகள்.! 

- Advertisement -

மேலும் உதயா,அழகிய தமிழ் மகன், மெர்சல்,சர்கார் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். இந்நிலையில் இந்த படத்தின் விஜய்யின் முதல் இன்ட்ரோ பாடலை பிரபல பின்னணி பாடகர் ‘பம்பா பாக்யா’ பாட இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அதே போல இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாட உள்ளார் என்ற ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் இதுவரை ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடியதே இல்லை. அதே போல விஜய் இறுதியாக ‘பைரவா’ படத்தில் பாப்பா பாபா பாடலை பாடி இருந்தார்.

தற்போது 2 வருடங்கள் கழித்து மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார் விஜய். விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Advertisement