கடந்த ஒரு சில வாரமாகவே வனிதா தான் சமூக வலைதளத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் ஒரு பிரபலமாக இருந்து வருகிறார். வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண விஷயம் தற்போது பெரும் சர்ச்சையை சிக்கி இருக்கிறது. மேலும், விவாகரத்து கொடுக்காமல் எப்படி வேறு ஒரு பெண்ணின் கணவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தஞ்சாவூர் மக்கள் குறித்து வனிதா பேசியுள்ள ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில், தஞ்சாவூர் மக்களைப் பற்றி நடிகை வனிதா பேசியது சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்வார்கள். வீட்டுக்கு வீடு இது சகஜம், பெண்களே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று வனிதா கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வனிதாவின் இந்தப் பேச்சால் தஞ்சாவூர் மக்கள் பெரும் கடுப்பில் இருக்கிறார்கள் தஞ்சாவூர் மக்கள் மட்டுமல்லாமல் எந்த ஊரில் இது போல அனைத்து கணவரும் இரண்டு பெண் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை வனிதாவின் இந்தப் பேச்சால் தற்போது பெரும் சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனால என்ன பிரச்சனை ஆரம்பிக்க போதோ தெரியலயே.
ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, திருமணமான எத்தனை ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார். அதேபோல சினிமாவில் எத்தனையோ பிரபலங்கள் இரண்டு திருமணம் செய்துகொண்டது இல்லையா? தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் கூட இரண்டு திருமணம் செய்து கொண்டதை இல்லையா என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.