இதை தெரு சண்டையாக மாற்றியதற்கு நன்றி. என் ஒரிஜினல் வேலையை நான் பார்க்கிறேன் – லட்சுமி ராமகிருஷ்னன் ட்வீட்.

0
26781
lakshmi
- Advertisement -

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனத்தை கேட்டதும் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலக்கப்போவது யாரு ராமர் தான் ஆனால் இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் என்றால் அது லட்சுமி ராமகிருஷ்ணன் தான் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் நடிகை என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

-விளம்பரம்-

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல்வேறு குடும்ப பிரச்சனைகளுக்கு நாட்டாமை செய்த இவர் சமீபத்தில் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து இருந்தார். அதில், இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் இப்படி ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன்.

- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ?  என்று கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வனிதா, கற்பழிப்பு மற்றும் தற்கொலை குறித்து பேசி உங்களின் உண்மையான கடமைகளைச் செய்யுங்கள் ஒரு குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் குடும்பத்தை பற்றி விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா உங்க வாய கொஞ்சம் மூடு மேடம் என்று கூறியிருந்தார்.

இருப்பினும் வனிதாவின் திருமணம் குறித்து தொடர்ந்து சில பேட்டிகளில் பேசி இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்திருந்ததற்கு வணிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் அவர் பதிவிட்டிருந்த டீவீட்டில்,

-விளம்பரம்-
Advertisement