காலைல எழுந்து பார்த்தா ஒரு 3000 பேர் கால் பண்ணி இருக்காங்க, கமல் சார் மட்டும் பண்ணல – வனிதா

0
492
Vanitha
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வனிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எனது தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ மட்டுமே. இதை கடந்து செல்ல எனக்கு தகுதி இல்லை. கொடூரமாக தாக்கப்பட்டது யாரென்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

-விளம்பரம்-

பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று அழைக்கப்பட்டார். எனது பிக் பாஸ் தமிழ் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு என் காரில் இறங்கி நடந்தேன். நான் என் சகோதரி சௌமியா வீட்டில் காரை விட்டு வந்து வந்த போது அந்த இடம் இருட்டாக இருந்தது. எங்கிருந்தோ ஒரு மனிதன் வந்து ரெட் கார்டு குடுக்ரீங்களா. நீ சப்போர்ட் பண்றியா என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார் . என் முகத்தில் ரத்தம் வந்தது. இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் அருகில் யாரும் இல்லை . இந்த சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் சொன்னால் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்கு தெரியும்.

- Advertisement -

வனிதா சர்ச்சை :

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை தேடினேன். யாரும் இல்லை என்று கூறி இருந்தார். இதை பார்த்து பலரும் பிரதீப்பை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். ஆனால், சிலர் வனிதாவுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள். பின்னர் இந்த விவகாரம் குறித்து பிரதீப், வனிதாவிடம் எனக்கு இதில் சமந்தம் இல்லை என்று மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே வனிதா மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தான்.

பிரதீப் மன்னிப்பு:

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இப்ப இருக்கும் உலகில் நமக்கு நடக்கும் விஷயத்தை வெளியே சொன்னால் மட்டும்தான் திருந்துகிறார்கள். மன ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக பலம் இருக்கிறது. ஆனால், உடல் பலம் குறைவு. அரசியல்வாதியாக இருக்கும் பொழுது, சினிமா பிரபலமாக இருக்கும் பொழுது நமக்கு முகம் என்பது ரொம்ப முக்கியம். அப்படி இருக்கும் போது இந்த முகத்தை வெளியே காண்பிக்க கூடாது என்பதற்காக தான் மிகவும் கேவலமான ஒரு செயலை மர்ம நபர் ஒருவர் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

வனிதா பேட்டி:

நான் தாக்கப்பட்டவுடன் ஏன் அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டேன் என்றால், இதனைப் பொய் என்றும், செட்டப் என்றும் சொல்வார்கள் என்று ஏற்கனவே தெரியும். பொதுமக்கள் அல்ல என்னுடைய குடும்ப உறுப்பினர்களே இதை நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு மோசமான மக்கள் வாழும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு சிலருக்கு தான் புரிதல், மனிதாபிமானம் இருக்கிறது. அது கூட இல்லை என்றால் நீ மனிதனே கிடையாது. தாக்குதல் நடந்த அன்றைய தினம் நான் அங்கே இருக்கின்றேன் என்பதை அவர்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொண்டுதான் என்னை தாக்க வந்திருக்கிறார்கள். நான் இருந்த இடத்தில் பெரிதாக பாதுகாப்பிற்கு காவலர்கள் யாரும் கிடையாது.

தாக்குதல் சம்பவம் குறித்து சொன்னது:

நான் காரை எடுப்பதற்காக கீழே வந்த போது இருட்டில் இருந்த மர்ம நபர் ஒருவர் என்னை அப்படியே திருப்பி முகத்தில் அடித்தார். அவர், ரெட் கார்ட், அதில் நீ சப்போர்ட் வேற என்று சொல்லியது மட்டும் எனக்கு கேட்டது. என்னை தாக்கிய உடன் என்னுடைய கைகள் எல்லாம் நடுங்கி விட்டது. அதற்கு பின் நான் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வீட்டுக்கு வந்தேன். காலையில் நடந்தவற்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு தூங்கிவிட்டேன். விழித்து பார்த்தால் தான் காவலர்கள் வந்து நின்றார்கள். எனக்கு பர்சனலாக காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு கொடுத்திருக்கிறார்கள் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement