பிக் பாஸ் வீட்டில் ஷிவின் மோசமான வார்த்தையை பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பிக் பாஸ் பல வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் “கானா காணும் காலங்கள்” டாஸ்கானது வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக இப்படி அசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டு வரும் ஷீவின் அவர்கள் இது ஒரு personality game show என்று அவர் வாயில் கூறினார் அப்படி என்றால் உங்கள் personality இதுதானா?#BiggBossTamil6 #AramVellum#Vikraman𓃵#VaathiVikraman#Vikraman_Hero_Of_BBTamil6 #VoteForVikraman pic.twitter.com/0nefYimF6V
— சே குவேரா 🖤❤ (@007Kannadasan) January 3, 2023
இந்த நிலையில் டாஸ்கில் முடிவில் 1 முதல் 10 வரை போட்டியாளர்கள் அவர்களே தரம் பிரித்து கொள்ளும்படி சொல்லப்பட்டது. இங்குதான் பிரச்னை ஆரம்பமானது.முதலில் அசீம் முதலாம் இடத்திற்கு வந்து நிற்க ஷிவின் மற்றும் விக்ரமன் தாங்கள் நேர்மையாக விளையாடியிருக்கிறோம் எங்களுக்கு தான் முதல் இடம் சரியாக இருக்கும் என பிக் பாஸிடம் கூற உடனே விக்கிரமனுக்கும் அசீமுக்கும் தரமான சண்டை நடந்தது.
இதையும் பாருங்க : கிளாமரா மட்டும் தான் நடிக்கிறேனா – வீடியோவை பகிர்ந்து தர்ஷா குப்தா பதிலடி.
அதற்கு பின்னர் ஷிவின் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அசீம் “நீ என்ன பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ன வேண்டுமாலாலும் பேசு” எனக் அநாகரீகமாக பேச ஷிவின் உங்களுக்கு பேச தைரியம் இல்லை எனக் கூற அசீமுக்கும் ஷிவினிக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. அசீம் என்னை தைரியம் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு மரியாதை கெட்டுவிடும் என்று விவாதிக்க தொடங்கினார்.
I guess she is saying 'Kandaraoli'
— Aarov Vimal (@aarov_vimal) January 3, 2023
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இந்த விவாதம் சண்டையாக மாறவே “தைரியமில்லை என்றெல்லாம் சொல்லாத மூஞ்சிய பாரு ஆமைக்குஞ்சு அவிச்சு வச்ச மாதிரி இருந்து பேசுரா” என்று கூற மணிகண்டன் அசீமை சமாதானப்படுத்தினார். பின்னர் சண்டை ஓரளவு குறையவே ஷிவின் 9வது இடத்திற்கும், விக்ரமன் 10வது இடத்திற்கும் சென்று நின்றனர். ஆனால் ஷிவினை இப்படி தரை குறைவாக பேசிய அசீம் பேசியதை விஜய் டிவி மற்றும் ஓடிடியில் 1 மாணிநேர காட்சியில் காட்டவில்லை.
இப்படி வாராவாரம் மற்ற போட்டியாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் அசிமை வார இறுதியில் கமல் வருத்தெடுப்பதும், அப்போது தலையாட்டி விட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய அதே பாணியை அசீம் பின் தொடர்வதும் வாடிக்கையாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சிகள் கூட கடந்த வாரம் அசீம், விக்ரமன் மற்றும் சிவினிடம் நடந்து கொண்ட முறையை குறித்து கமல் கண்டித்து இருந்தார்.
#Shivin akka oda supremacy lam ketta varthai & double meaning la pesuradhu dha . Thirumba solla mudiyadhu level la words vidum shivin . #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss6Tamil #AramVellum #Vikraman #VaathiVikraman #Vikraman_Hero_Of_BBTamil6 #vikramanarmy #VoteForVikraman pic.twitter.com/HwnrX8Tc82
— siva (@winsiva1994) January 3, 2023
ஆனால் அசைமை விட சிவின் தான் அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், சிவின் பேசும் கெட்ட வார்த்தைகள் குறித்து கமல் இதுவரை கண்டித்தது கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் சிவின், கதிரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு மோசமான கெட்ட வார்த்தையை பேசியிருந்தார். அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து ஷிவின் பேசும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் ஏன் கவனிக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.