வடிவேலு பாலாஜியை தெரியல ? உங்களுக்கு Kpyல நடுவாரா இருக்க தகுதி இருக்குன்னு நினைக்கிறீங்களா ? வனிதாவை கேள்வி கேட்ட ரசிகை.

0
6098
vanitha

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி பின்னர் அங்கே சிகிச்சை சரியில்லாததால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு பின்னர் அங்கு உயிரிழந்தார்.

- Advertisement -

வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு பலர் தங்களது இறங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் , தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரை எனக்கு தெரியாது. நாங்கள் இருவரும் ஒன்றாக சந்தித்ததும் இல்லை வேலை செய்ததும் இல்லை. ஆனால், அவர் மிகவும் திறமையான மனிதர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது குடும்பம் என்ன ஆகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் விஜய் டிவியில் இருந்தும் உங்களுக்கு வடிவேல் பாலாஜியை தெரியாதா என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த வனிதா, கடவுள் சத்தியமாக இதற்கு முன்னால் அவரது நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை நான் நடுவராக இருப்பதால்தான் தற்போது கூட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பார்க்கிறேன் இதற்கு முன்னாலோ அல்லது தற்போது நான் அவருடன் பணியாற்றியது இல்லை என்று கூறியுள்ளார் வனிதா. இதற்கு ரசிகர் ஒருவர், அக்கா சும்மா கேட்கிறேன் நீங்கள் உண்மையில் சாவடி நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? கலக்கப்போவது யாரு எவ்வளவு பெரிய பிரபலமான நிகழ்ச்சி. அதில் வடிவேலு பாலாஜி அனைவருக்கும் தெரிந்த முகம் ஆனால் நடுவராக இருந்து கொண்டு நீங்கள் இதைப் பற்றியெல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதிலளித்த வனிதா நிகழ்ச்சியில் பங்குபெற எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. நான் அந்த நிகழ்ச்சியில் திரைப்பட அனுபவம் இருக்கும் ஒரு ரசிகையாக தான் இருக்கிறேன். தற்போது தான் ஒருவர் இருந்திருக்கிறார். எனவே, புதிய சர்ச்சையை ஆரம்பிக்க வேண்டாம். அவரது குடும்பத்திற்கு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார் வனிதா.

Advertisement