ஜோவிகா பண்ண அந்த விஷயத்த பத்தி கமல் பேசவே இல்ல, நெறய பாய்ண்டை மிஸ் பண்றாரு – வனிதா ஆதங்கம்.

0
495
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார்.

- Advertisement -

விஜய் வர்மாவின் வெளியேற்றம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. விஜய் வர்மாவிற்கு ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் அவர் டாஸ்கின் போது நடந்துகொண்ட விதம் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க் ஆரம்பம் ஆன சில நிமிடத்தில் நிக்சன் கண்ணாடி கதவை உடைத்தார். இதனால் பிரதீப் மற்றும் மாயாவிற்கு சிறு காயங்கள் கூட ஏற்பட்டது.

இதனால் டாஸ்க்கை சிறிது நேரம் நிறுத்திவைத்தார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து மீண்டும் இந்த டாஸ்க் துவங்கியது. அப்போது அனைவரும் ஆக்ரோசமுடன் ஆடினார்கள். ஆனால், விஜய் வர்மா மற்றவர்களை கடுமையாக தாக்கி விளையாடினார். எதோஅதிலும் பிரதீப்பை WWFல் தூக்கி போடுவது போல தூக்கி போட்டார். இப்படி ஓரு நிலையில் தான் நேற்று விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த டாஸ்கின் போது நடந்த இந்த சம்பவங்களை எல்லாம் கமல் பெரிதாக பேசவில்லை. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் வனிதா’ நிக்சனும் ஜோவிகாவும் டாஸ்க்கில் கண்ணாடி உடைந்த பின்னர், ஒருவருக்கொருவர் முதல் உதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு யாரோ ஒருவர் டாஸ்க்கில் உள்ள பாட்டில்களை பற்றி கேட்க, ஜோவிகா அப்படி ஒரு கேம் எனக்கு தேவையில்லை, கேம் போனால் போகட்டும் என்று சாடி இருப்பாள்.

அதை கமல் சார் கவனித்து சொல்லி இருக்கலாம். ஏனென்றால் அவர் எதிர்பார்த்த, அவர் சொன்ன விஷயத்தை ஜோவிகா பிக்பாஸ் வீட்டினுள் நிகழ்த்தி இருக்கிறாள். அதை அவர் மிஸ் செய்து விட்டார் என்று நான் நினைக்கிறேன். கமல்ஹாசன் நிறைய விஷயங்களை மிஸ் செய்கிறாரோ என்று தோன்றுகிறது. அவர் அந்த ஒரு மணி நேர எபிசோடை மட்டுமே வைத்து பேசுவது போல இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement