I QUIT MY – டைட்டில் வின்னர் சரவணன் பதிவிட்ட பதிவு. பிக் பாஸால் வந்த வெறுப்புகள் காரணமா?

0
363
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருந்தனர். வழக்கம் போல இந்த சீசனிலும் ஒரு சில விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணா விக்ரமும் ஒருவர்.

- Advertisement -

இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து இறுதி வரை பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை விஷயத்திலுமே அதை கண்டு கொள்ளவும் இல்லை, தலையிடுவதும் இல்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்களுக்கு மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது.அதே போல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்து அவர்களுக்கு ஜால்ரா அடித்ததும் ரசிகர்களுக்கு இவர் மீது கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கியது.

அதிலும் வெளியில் வந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்ற விக்ரம் அப்போதும் திருந்தாமல் மாயாவிற்கு மீண்டும் ஜால்ரா அடித்தார். இதனால் அவரது தங்கையை கடுப்பாகி’உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூட பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘I QUIT MY PASSION’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனாக இருந்த வரை விக்ரமிற்கு இந்த அளவிற்கு ஹேட்டர்ஸ்கள் இருந்தது இல்லை. ஆனால், பிக் பாஸுக்கு பின்னர் தான் இவருக்கு ஹேட்டர்கள் உருவானது. ஹேட்டர்ஸ் என்று சொல்வதை விட இவரை ரசித்த பலரும் நிஜத்தில் இவர் ஒரு முதுகெலும்பு இல்லாத நபரை போல நடந்து கொண்டதை பார்த்து தான் இவர் மீது வெறுப்பில் ஆழந்தனர் என்பதே உண்மை.

விக்ரமின் இந்த பதிவை கண்ட அவரது பாலோவர்கள் பலர் விக்ரமிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் விக்ரமின் Passion என்றால் அது நடிப்பு தான். அதை பல முறை அவரே சொல்லி இருக்கிறார். எனவே விக்ரம் இனி நடிக்கப்போவது இல்லையா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இவரது இந்த முடிவிற்கு காரணம் பிக் பாஸில் இவர் பெற்ற விமர்சனமும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement