பிக் பாஸ் செய்த மோசமான செயல்.! கடுப்பில் ரசிகர்கள்.! அப்போ இது உண்மையா..?

0
399
Big-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் மஹத் வெளியேற்ற பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற “உத்தமவில்லன்” டாஸ்கில் சரியாக பர்பார்ம் செய்யவில்லை என்று டேனி, பாலாஜி, ஜனனி,ரித்விகா ஆகியோர் நேரடியாக நமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில் ரித்விகா மட்டும் சிறப்பு பவர் மூலம் இந்த வார நமினேஷனில் இருந்து காப்பாற்ற பட்டிருந்தார்.

Aishwarya-Yashika

இந்த வார நமினேஷனில் 3 நபர்களே இருந்த நிலையில் நேற்று, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை நமினேஷன் நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அதற்கு முக்கிடய காரணமே இந்த வாரத்திற்கான நமிநேஷன் நடந்தால் கண்டிப்பாக ஐஸ்வர்யா, யாஷிகா இடம்பெருவார்கள். அப்படி இடம் பெற்றால் கண்டிப்பாக இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேறி விடுவார்கள் என்று மக்கள் நினைத்தனர்.

ஆனால், இந்த வாரமும் பிக் பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகவை தந்திரமாக காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ்.நேற்று நமினேஷன் நடைபெறாமல் இருந்தது ரசிகர்களுக்கு மட்டுமல்ல போ ட்டியாளர்களுக்கும் சற்று அதிருப்தியாக இருந்தது. நேற்று நமினேஷன் நடக்காமல் இருந்தது குறித்து பாலாஜி, டேனி, ஜனனனி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கையில் ஏன் இந்த வாரம் நமினேஷன் நடக்கவில்லை என்று கிங்ஹாம் அதிருப்தியில் தான் இருந்தனர்.

ஒருவேளை நேற்று நமினேஷன் நடைபெற்றிருந்தால் கண்டிப்பாக பாலாஜி, டேனி, சென்ராயன் ஆகியோர் ஐஸ்வர்யா அல்லது யாஷிகவை தான் நமினேட் செய்திருப்பார்கள். இதை ஏற்கன்வே டேனி மற்றும் பாலாஜி கலந்தலோசித்து முடிவெடுத்திருந்தனர். அதே போல மக்கள் எதிர்பார்த்து இருந்ததை போல யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற போட்பட்டிருப்பார்கள். ஆனால், இந்த வாரமும் இவர்கள் இருவரும் காப்பற்றபட்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.இதனால் பிக் பாஸ் இவர்கள் இருவரையும் வாரா வாரம் காப்பாற்றுகிறார் என்ற ஒரு பேச்சு அதிகம் உலாவுகிறது, இது உண்மையானால் கமெண்ட் மூலம் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.