மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் பேசியது இதுதான் – அதிகாரப்பூர்வ தகவலை சொன்ன புஸ்ஸி ஆனந்த்.

0
1628
- Advertisement -

ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கூறியது இது தான் என்று புஸ்ஸி ஆனந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

-விளம்பரம்-

இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் அவர்கள் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும், செய்து வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் இவற்றையெல்லாம் செய்கிறார் என்று அரசியல் தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது.

விஜய் அரசியல்:

அதுமட்டுமில்லாமல் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், மாணவர்கள் விருது வாங்கும் நிகழ்வில் விஜய் அவர்கள் முழுக்க முழுக்க மாணவர்களுடன் மட்டும் தான் நேரத்தை செலவிட்டிருந்தார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் இவரால் பேச முடியவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து பேச ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்.

-விளம்பரம்-

ஆலோசனை கூட்டம்:

இந்த கூட்டம் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை மட்டும் விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்திருந்தார். அதற்குப் பிறகு உணவருந்தி இந்த கூட்டத்தை முடித்து விட்டார்கள். பின் இரண்டாவது நாளாக நேற்று நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்திருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.

புஸ்ஸி ஆனந்த் அளித்த பேட்டி:

இவர்களுடனும் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு புஸ்ஸி ஆனந்த் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், விஜய் தன்னுடைய நிர்வாகிகளை சந்தித்து தனித்தனியாக பேசி இருந்தார். அது மட்டும் இல்லாமல் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், இலவச பாடசாலை குறித்து விஜய் இடம் அனுமதி வாங்கிய பின் முறையாக அறிவிப்போம் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக தான் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

Advertisement