விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, ஒன்னுக்கு ரெண்டாக தாமரை- சாவித்திரி பற்றி ஏத்தி விட்டுக் கொண்டிருந்தார். எல்லோருமே ராஜாங்கத்திற்கு போன் செய்து திருமணத்தைப் பற்றி விசாரிப்பதால் அவர் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, கோபத்தில் போலீசுக்கு போன் செய்து காமேஷ் மீது புகார் கொடுத்தார். கோவிலுக்கு வந்த போலீஸ், காமேஷ் பிச்சையை பார்த்தவுடன் சகஜமாக பேசி இருந்தார்கள். இது எல்லாம் பார்த்து சாவித்திரிக்கு பயங்கர கோபம் வந்தது.

காமேஷ், என்னை திருமணம் செய்து கொள்ள அவர்கள் தான் வற்பூர்த்தினார்கள். திருமணத்திற்கு முன்பு கூட அவர்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னார்கள் என்று தாமரை- காமேஷ் இருவரும் பேசிய வீடியோவை ஆதாரத்தாக காண்பித்தார். இதையெல்லாம் பார்த்து போலீஸ் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். தாமரை- சாவித்திரி இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள். இன்னொரு பக்கம் சேது வீட்டில் கருப்பு, தனம், மலர் எல்லோருமே தாமரை- சாவித்திரி இருவரும் சேர்ந்து கோவிலில் பிச்சை எடுப்பது போலவும் சாப்பிடும்வது போல் நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சின்ன மருமகள்:
தமிழ் திட்டியுமே யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பயங்கரமாக சிரித்தார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி தான் நினைத்தது நடந்து விட்டது என்று தன் மகளுடன் சேர்ந்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அதோட ஆட்டம் பாட்டம் என்று ஈஸ்வரி- சித்ரா இருந்தார்கள். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எங்கு தூங்குவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காமேஷ், தான் தங்கும் இடத்தை காண்பித்தார். அதை பார்த்து தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமரை, சாவித்திரி இருவரும் தங்குவதற்காக காமேஷ் ஒரு வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அதை பார்த்தவுடன் தாமரை பயங்கரமாக கோபப்படுகிறார். இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அந்த இடத்திலேயே இருவரும் தங்கிக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் சேது-தமிழ் இருவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது கனவில், தமிழ்செல்வியை வீட்டை விட்டு துரத்துகிறார்கள்.
சேது, தமிழ்ச்செல்வியின் மீது பயங்கரமாக கோபப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் இந்த கனவை கண்டு சேது பயந்து எழுகிறார். எதற்காக இப்படி எல்லாம் கனவு வருகிறது என்று சேது புலம்புகிறார். இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சை தன்னுடைய முதலிரவுக்கு அழகாக ரூமை தயார் செய்து வைக்கிறார். அப்போது வந்த தாமரை அந்த செட்டப்பை பார்த்து கொந்தளித்து பிச்சையிடம் சண்டை போடுகிறார். அதோடு காமேஷ் பிச்சையை ரூமை விட்டு வெளியே துரத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






