விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ராதா, விபத்தினால்தான் உன் அம்மாவிற்கு பழைய நினைவுகள் வரவில்லை. சீக்கிரத்திலேயே உன்னுடைய அம்மா உன்னிடம் வந்து விடுவார். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. உன் அம்மாவை தப்பா நினைக்காதே என்றெல்லாம் சொன்னார். காவிரி தான் தன் அம்மா என்று தெரிந்ததும் அம்முவால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக நிற்கிறார். அதற்குப்பின் வீட்டில் யாரிடமும் பேசாமல் அம்மு தனியாகவே இருந்தார். காவிரி. விஜய், தாத்தா எல்லோருமே அம்முவிடம் பேசி இருந்தார்கள். ஆனால், அம்மு யாருக்குமே பதில் கொடுக்காமல் உள்ளே சென்று விட்டார்.

ராதாவும் எதுவும் சொல்லாமல் தயங்கி நிற்கிறார். இன்னொரு பக்கம் யாழினி, காவிரியின் புகைப்படத்தை காண்பித்து அம்முவின் அம்மாவும் காவிரி சித்தியும் ஒரே மாதிரி இருந்தார்கள். அது எப்படி? அம்மு காவிரி சித்தியை தான் தன்னுடைய அம்மா என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றெல்லாம் கேட்டார். கங்கா- சாரதா இருவரும் ஷாக் ஆனார்கள். யாழினி இடம் கங்கா ஏதேதோ சொல்லி சமாளித்து அனுப்பி விட்டார். அதற்குப் பின் அம்மு சரியாக பேசாததால் காவேரி சோகமாக இருந்தார். வீட்டுக்கு வந்த காவிரி எதுவும் சொல்லாமல் அம்மு நடந்து கொண்டதையே நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
மகாநதி:
அம்மு தன்னிடம் ஒழுங்காக பேசாததை பற்றி காவிரி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். சாரதா-கங்கா இருவருமே யாழினி சொன்ன விஷயத்தை தான் நினைத்துப் பார்த்தார்கள். இருந்தாலும் அதை காவிரியிடம் சாரதா சொல்லவில்லை. இன்னொரு பக்கம் அம்மு, எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்று விஜய், தாத்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ராதா, அம்மு நீயும் காவிரியும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து என்னுடைய அம்மா யார்? என்று கேட்டார்.

சீரியல் ட்ராக்:
உண்மையை மறைக்க முடியவில்லை. அதனால் நடந்த எல்லாவற்றையும் நான் அம்மிடம் சொல்லிவிட்டேன் என்றார். இதைக் கேட்டு விஜய் அதிர்ச்சி அடைகிறார். எதற்காக இப்படி செய்தீர்கள் என்றார். ராதா, எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்? அம்மு எல்லாவற்றையும் புரிந்து கொள்வாள் என்றார். பின் விஜய், அம்முவை சந்தித்து பேசுகிறார் என்றெல்லாம் கேட்டார். விஜய், அவருக்கு பழைய ஞாபகம் எதுவுமே இல்லை. சீக்கிரத்திலேயே அம்மா நம்முடன் வந்து விடுவார். நீ இதைப் பற்றி உன்னுடைய மிஷ்ஷிடம் சொல்லாதே என்றார். அம்முவும் சரி என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் அம்மு, தன்னுடைய அம்மாவை பற்றி கேட்டு கொண்டிருக்கிறார். இதனால் விஜய், தங்களுடைய காதலில் தொடங்கி கல்யாணம், குழந்தை பிறந்த கதை வரை என அனைத்தையும் சொல்லுகிறார். அதைக் கேட்டு அம்மு ரொம்பவே சந்தோஷப்படுகிறார். ஒரு வழியாக அம்முவை தூங்க வைத்துவிட்டு விஜய் தன்னுடைய தாத்தா,சித்தி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தாத்தா, எத்தனை நாளுக்கு அம்மு உண்மையை சொல்லாமல் இருப்பாள். என்ன நடக்குமோ? என்று புரியவில்லை என்று வருத்தப்படுகிறார். விஜய்யும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்






