நீ நடக்கும் போது எலும்புகூட மாதிரி இருக்க – கல்லூரியிலேயே உருவக் கேலியை சந்தித்துள்ள திவ்ய பாரதி.

0
1952
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் இயக்கத்தில் வெளியான “பேச்சுலர்” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் திவ்யா பாரதி சமீபத்தில் இவருடைய உருவத்தை கேலி செய்யும் அவரின் பின்தொடர்பவர்களின் கருது குறித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் நீண்ட பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

- Advertisement -

“பேச்சுலர்” திரைப்படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷுடன் ஜோடி சேர்ந்த பிறகு, திவ்ய பாரதி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார். இதனை தொடர்ந்து அவருக்கு ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களும் வேகமான அதிகரித்து வருகின்றனர். இவரை தற்போது 3 மில்லியன் பின்தொடப்பவர்களுக்கு மேலே இருக்கின்றனர். திவ்ய பாரதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் தொடந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதுண்டு.

இந்நிலையில் சமீபத்தில் திவ்யா பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிலர் திவ்யா பாரதி ஹிப் பேட்களைப் பயன்படுத்துவதாகவும், அத்தகைய வடிவத்தைப் பெற அறுவை சிகிச்சை செய்ததாகவும் மக்கள் தன்னை எவ்வாறு விமர்சிக்கிறார்கள் என்பதைப் பற்றி கூறியிருந்தார். அவர் இத்தனை காலம் என்ன அனுபவித்தார் என்பதைப் பற்றி அவரைப் பின்தொடர்பவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

அந்த பதிவில் அவர் கூறியதாவது `இந்த இடுகை நிச்சயமாக எதையும் விளக்கவோ அல்லது நிரூபிக்கவோ அல்ல, ஆனால் உங்கள் எல்லா குறைபாடுகள் மற்றும் பலங்களுடன் உங்களை நேசிப்பதற்காக. சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று மக்கள் குறிப்பிடும் சில கருத்துகளைப் பார்க்கிறேன்!அந்த நாட்களில், நான் “ஃபாண்டா பாட்டில் அமைப்பு” “எலும்புக்கூடு”போன்ற பயங்கரமான கருத்துக்களைப் பெறுவேன். எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம்.

இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்தது, இது என் உடலை நானே வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது, மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல; என் இடுப்பு எலும்பு அமைப்பு இயற்கையில் பரந்ததாக உள்ளது. பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்து எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன். நான் இடுகையிடும் ஒவ்வொரு புதிய படத்திலும், குறிப்பாக என் உடல் வகைக்காக நான் பாராட்டுகளைப் பெற ஆரம்பித்தேன். நான் ஜிம்மிற்குள் நுழையவே இல்லை என்றாலும் அவர்களில் பலர் எனது வொர்க்அவுட்டைக் கேட்கத் தொடங்கினர். அந்த மனிதரை அறிந்து வியந்தேன்

அப்போதிருந்து நான் என் உடலைத் தழுவ ஆரம்பித்தேன், அது என் நம்பிக்கையை வளர்த்தது. வித்தியாசமான உடல் வகையைக் கொண்டிருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றியது என்பதை நினைவூட்டுவதற்கு அந்த நாட்களில் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் நான் உண்மையிலேயே விரும்புகிறேன்!
அன்பான சக பெண்களே, விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம். இதில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன் என்று தான் இதனை காலம் சந்தித்த விமர்சனங்களுக்கு முடிவு கட்டும் வகையில் திவ்யா பாரதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

Advertisement