திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார். பிறந்தநாளை இறந்தால் ஆக்கிய கொரோனா.

0
1077
- Advertisement -

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக் கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் இன்று (ஜூன் 10) காலமானார். சேப்பாக் கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல் அன்பழகனுக்கு கடந்த 2-ம் தேதி திடீரென்று காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

மருத்துவ மனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதற்கான மருந்து, மாத்திரை களை எடுத்து வந்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரது உடல் நிலையும் மோசமாகி வந்தது.

- Advertisement -

மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த போதிலும் இன்று காலை 8.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால் இன்று (ஜூன் 10) அன்பழகனுக்கு 62 பிறந்தநாள். பிறந்த நாளிலேயே அன்பழகன் இருந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்பழகனின் உடல் நிலை இன்று காலை மோசமானதை அறிந்த தி மு க தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்தார். அன்பழகன் உயிர்பிரியும் நேரம் அவர் மருத்துவமனையில்தான் இருந்தார். அவருக்கு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.

-விளம்பரம்-

மேலும், அன்பழகனின் இறப்பு குறித்து ட்வீட் செய்த ஸ்டாலின், மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் @JAnbazhagan ஐ எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்? அன்பழகனின் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement