கணவரால் கைக்குழந்தையுடன் கைவிடப்பட்ட பிரபல நடிகையின் இன்றைய நிலை – புகைப்படம் உள்ளே !

0
4541
banu1

80களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்பிரியா. இவர் ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர். 1983ஆம் ஆண்டு மெல்ல பேசுங்கள் என்ற தமிழ் திரைபடத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடனம் என 150 படங்களில் நடித்தார்.

bhanupriya

தமிழில் ஆராரோ ஆரிரரோ, பொண்டாட்டி சொன்ன கேக்கணும், அழகன், தளபதி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சாந்தி பிரியா என்ற தங்கையும், கோபால கிருஷ்ணன் என்ற அண்ணனும் உள்ளனர்.

இதில் சாந்திபிரியா, எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், அண்ணன் கோபால கிருஷ்ணன் நடிகை விந்தியாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்னும் கிராபிக் டிசைனரை அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்டார் பானுப்பிரியா.

bhanupriya

2003ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பினை நிறுத்தினார் பானு. கடந்த 2005ஆம் ஆண்டு இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர். தற்போது மீண்டும் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கி உள்ளார் பானு.