நான் இசையமைத்த அந்த ரஜினி படத்துக்கு இளையராஜான்னு பெயர் வந்தது – கங்கை அமரன் சொன்ன உண்மை.

0
2331
ilayaraja
- Advertisement -

இளையராஜா குறித்து கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கங்கை அமரன். இவர் இசை அமைப்பாளர் மட்டும் இல்லாமல் பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதோடு இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

கங்கை அமரன் 1979 ஆம் ஆண்டு வெளியான கரைகடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் இசையமைத்திருக்கிறார். இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த புகைப்படம் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். பிரபு சுரேஷ் நடித்த கோழி கூவுது என்ற படத்தில் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

- Advertisement -

இளையராஜா குறித்து கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கங்கை அமரன். இவர் இசை அமைப்பாளர் மட்டும் இல்லாமல் பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதோடு இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படம்:

அதை தொடங்கி இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இவர் இயக்கிய கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, காந்திமதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் வசூல் மழையை குவித்து இருந்தது என்று சொல்லலாம். இதனை அடுத்து எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, பொண்ணுக்கு ஏத்த புருஷன், வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன் என ராமராஜனை வைத்து கங்கை அமரன் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

கங்கை அமரன் திரைப்பயணம்:

அதற்கு பின் இவர் படங்களை இயக்குவது இல்லை. தற்போது இவர் கரகாட்டக்காரன் 2 படம் இயக்க தயராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் கங்கை அமரன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் இளையராஜா குறித்து கூறியது, இளையராஜா இசை அமைத்ததாக நீங்கள் நினைக்கும் பல பாடல்கள் எல்லாம் நான் இசையமைத்தது தான். என் அண்ணன் இளையராஜா வெளி ஊருக்கு சென்றிருந்தால் நான் தான் இசையமைப்பேன்.

இளையராஜா குறித்து சொன்னது:

நான் தனியாக இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பதாக இளையராஜா மூலம் வந்த பாடல்களுக்கு நான் தான் இசையமைத்திருக்கிறேன். அந்த ஞானம் தான் என்னை இசையமைப்பாளர் ஆக்கியது. உதாரணத்திற்கு, ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கு நான் தான் இசையமைத்தேன். அந்த படத்தின் அனைத்து பாடல்களும் நன்றாக சென்றது. ஆனால், அந்த படத்தில் இளையராஜா பெயர்தான் வந்தது. அதை எல்லாம் வெளியில் சொன்னது கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement