இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகைகள் சிலர் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ம.கா.பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து வழிநடத்தும் பொறுப்பு 'பிக் பாஸ்' ஷக்திக்கும், காயத்ரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில சின்னத்திரை நடிகைகளிடம் நிகழ்ச்சியின் அனுபவம் பற்றி கேட்டோம்.
இந்த நிகழ்ச்சியின் போது அறிமுகம் செய்யப்பட்ட காயத்திரி ஜிம்மிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடினார்.





