தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் என்பது நம் அனைவரும் அறிவோம். அதிலும் மெர்சல் மற்றும் சர்கார் படத்திற்கு பிறகு விஜய்யின் புகழ் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது.
அது போக மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய்க்கு ஆசியாவிலேயே சிறந்த நடிகர் என்று IARA அமைப்பு விருதை கூட வழங்கியது. இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் தமிழ் நடிகர்களை பற்றி பேசியுள்ளார்.
இதையும் படியுங்க : விஜக்கு தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன்..!
கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்க் கடந்த சில மாதங்ளாக தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் யூடுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் தமிழ் நடிகர்கள் பற்றி கேட்கப்பட்ட போது, தமிழ் ‘எனக்கு ரஜினி, கமல் இருவரையும் நன்றாக தெரியும், அவர்களின் நிறைய படங்களை பார்த்துள்ளேன்.அதே நேரம் தற்போது எனக்கு விஜய்யை நன்றாக தெரியும்’