இவங்க தான் எனக்கு கட்டிபிடிக்க கத்துக்கொடுத்தாங்க- வில்லன் சித்தார்த்தா சங்கர்!

0
1169

கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 8ஆம் தேதி திரைக்கு வந்த படம் சத்யா. இந்த படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்க ரம்யா நம்பீசன் சதீஷ், ஆனந்தராஜ்,வரலட்சுமி யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படம் தற்போது வரை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வில்லனாக நடித்திருப்பவர் தான் சித்தார்த்தா சங்கர். படத்தில் அருமையாக நடித்து மக்களை கவர்ந்திருப்பார்.

இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்த டாக்டர் ஆவார். சினிமா தான் எனக்கு வேண்டும் என சென்னை கிளம்பி வந்துவிட்டார். முன்னர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தில் நடித்திருப்பார்.

தற்போது சத்யா படத்தின் ஆடிசனில் சிபிராஜ் தான் இவரை தேர்ந்தெடுத்தார். மேலும் சத்யா படத்தில் ரம்யா நம்பீசனுக்கு கணவராக நடித்த போது கட்டிபிடிக்கும் சீன்களில் பதட்டமாக இருந்ததாக கூறினார்.

அந்த நேரத்தில் ரம்யாவே வந்து இவ்வாறு கையை சாஃப்டாக அழுத்தாமல் பிடித்து மெதுவாக கட்டிபிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். எனக் கூறினார் வில்லன் சித்தார்த்தா.