50 நாளை கடந்த  ‘கழுவேத்தி மூர்க்கன்’ – OTTயில் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் – இமானின் நெகிழ்ச்சியான பதிவு.

0
1224
- Advertisement -

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் வெளியாகி ஐம்பது நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இசையமைப்பாளர் டி.இமான்.தமிழில் வித்தியாசமான கதை தேர்ந்தெடுத்து ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தவர் அருள்நிதி இறுதியாக இவரது நடிப்பில் வெளியான டி ப்ளாக் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்றிருந்தது இதனை தொடர்ந்து இறுதியாக இவர் கழுவி மூர்கன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்தை ஜோதிகா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படத்தை இயக்கிய சை.கவுதமராஜ் தான் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான துஷாரா விஜயன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாகி இருந்தது திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்கத் தவறிய பல்வேறு ரசிகர்கள் Ottயில் பார்த்து இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை போட்டு இருக்கிறார்.

அதில்’ 50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ‘கழுவேத்தி மூர்க்கனை’ பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்; ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும்போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக ’கழுவேத்தி மூர்க்கன்’ அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான். “நம்ம அடி வாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும். தொடர்கிறது பயணம்.” இவ்வாறு டி.இமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement