எங்கிருந்துடா வர்றீங்க? யூடுயூப் விமர்சகர்களை விளாசிய மாவீரன் தயாரிப்பாளர். பின்ன ஒரு நியாயம் வேண்டாமா ?

0
1765
- Advertisement -

மாவீரன் படத்தை விமர்சனம் செய்த youtube சேனல்களை கலாய்த்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை, அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த இன்று மாவீரன் படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது.

படத்தின் கதை:

பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

youtube சேனல்கள் செய்யும் சேட்டை:

இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் youtube தளங்களை கலாய்த்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் செய்தி சேனல்கள் தொடங்கி youtube சேனல்கள் வரை என பலருமே முதல் ஷோ முடிந்த பிறகு தான் ரசிகர்களிடம் தங்களுடைய ரிவியுவை கொடுப்பார்கள்.

சுரேஷ் காமாட்சி டீவ்ட்:

இதுதான் வழக்கமான ஒன்று. ஆனால், மாவீரன் படம் வெளிவாவதற்கு முன்னே முதல் ரிவ்யூ இது என்று சொல்லி சில யூடியூப் சேனல்கள் போலியான வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக தான் கடுப்பாகி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், “எங்கிருந்துடா வர்றீங்க?! இன்னும் படமே ஆரம்பிக்கலை… ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே… அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ… எப்படிர்ராராராரா” என்று கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement