மூன்று வருடங்களுக்கு பின்னர் கமல் படத்தில் இணைந்த முக்கிய நடிகர்.!

0
430
Indian 2

ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான ‘இந்தியன் ‘ திரைப்படம் ,மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் தற்போது பாகத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது.

indian-2

2.0 படத்திற்கு பின்னர் ஷங்கர் இயக்கும் முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் சில போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

இதையும் படியுங்க : இதுவரை வெளிவந்த அனைத்து இந்தியன் 2 போஸ்டரிலும் இதை கவனிச்சீங்களா.!

மேலும், இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக முதன் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் வெளிவராத நிலையில் தற்போது இந்த படத்தில் டெல்லி கணேஷ் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் டெல்லி கணேஷ் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், அவ்வை ஷண்முகி, உத்தம வில்லன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கமலுடன் பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். தற்போது மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கமலுடன் மீண்டும் இணைந்துள்ளார்.