பாணி பூரி விற்ற நபர் தற்போது ஐபிஎல் அணியில். எத்தனை கோடிக்கு ஏலம் போனார் தெரியுமா ?

0
4090
Yashasvi-Jaiswal
- Advertisement -

இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் உலகில் நடைபெறும் பிரம்மாண்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டியாக கருதப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கென்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரின் பதிமூன்றாவது சீசன் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று அதாவது (டிசம்பர் 19ம் தேதி) துவங்கியது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Image result for yashasvi jaiswal pani puri

- Advertisement -

இந்த ஏலத்தில் 8 அணிகள் கலந்து கொண்ட நிலையில் பாணி பூரி விற்ற ஒரு கிரிக்கெட் வீரரை ஏலத்திற்கு எடுத்து அவரை கோடீஸ்வரர் ஆக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ராஜஸ்தான் அணி. உத்தரப்பிரதேச மாநிலம், பதோகி அருகே சூர்யா நகரைச் சேர்ந்தவர் யாஷ்வி ஜெய்ஸ்வால். இவரின் தந்தை சிறிய கடை நடத்தி வருகிறார். மும்பை மாநகருக்கு வந்த நோக்கமே கிரிக்கெட்டில் எப்படியாவது மிகப்பெரிய வீரராக உருவாக வேண்டும் என்ற கனவுடன் தன்னுடைய 11-வயதில் மும்பைக்குப் குடிபெயர்ந்தார் ஜெய்ஷ்வால்.

இதையும் பாருங்க : 25 வருடங்களுக்கு பின் ரீகிரியேட் செய்த ‘முக்காலா முக்காபுலா’ பாடல். பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள்..

ஆனால், வறுமையின் காரணமாக அவருக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. மும்பையில் உள்ள முஸ்லிம் யுனைடெட் மைதானம் குடிசை அமைத்து தங்கி தனது வாழ்க்கையை நடத்தி வந்த ஜெய்ஸ்வால், வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஒரு பானிபூரி தயாரிக்கும் கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அதே நேரம் தனது கனவையும் விடாமல் மீதமுள்ள நேரத்தில் கடுமையாக கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார் ஜெயஸ்வால், கடந்த 2015 ஆம் ஜெயஸ்வாளுக்கு மும்பையின் கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட கிடைத்தது. அந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 319 ரன்களை அடித்து விளாசினார்.

-விளம்பரம்-
Image result for yashasvi jaiswal pani puri

இந்த சீசனில், ஜொலித்த ஜெயஸ்வாலுக்கு விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெயஸ்வால் மும்பைக்கு 12 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார், இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இளைய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற ஜெயஸ்வாலுக்கு இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைத்தது. வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக விளையாடவும் இருக்கின்றனர்.

Advertisement