உலக கோப்பை தொடரில் இருந்து தவான் நீக்கம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0
717
Dawan
- Advertisement -

2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பைகான தொடர் மிகவும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

-விளம்பரம்-
Dhawan

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் கோலி, தோனி, பாண்டியா மற்றும் ராகுல் என அனைவருமே சிறப்பாக விளையாடி வருவதால் அடுத்தடுத்த போட்டிகளை காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் பாருங்க : என்னடா ஹேர் ஸ்டைல் இது.! பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் ரசிகர்கள்.! 

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கல் உண்டாகி உள்ளது. அது யாதெனில் கடந்த ஆஸ்திரேலியா போட்டியின்போது தவான் குல்டர் நைல் வீசிய பந்தில் பெருவிரலில் அடிபட்டார். அந்த காயம் தற்போது விரலில் வீக்கமடைந்து உள்ளதாகவும் அதற்காக இன்று தவானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Pant


-விளம்பரம்-

அவருக்கு பதிலாக மாற்று வீரரை இங்கிலாந்து அனுப்ப இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி தனது மாற்று வீரராக விளையாட இருப்பது இந்த இருவர் மட்டும் என்று தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணிக்கு தீர்வாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனெனில் ஐயர் நிதானமாக ஆடி ரன் சேர்க்க கூடியவர் ஆனால் துவக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை உடையவர் பண்ட் இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் இந்திய அணிக்கு தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது என்று இந்திய அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது. அதன்படி இவர்கள் இருவரில் ஒருவர் இந்திய அணியில் தேர்வு ஆகவுள்ளது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement