என்ன பொண்ணு பாக்க வரேன்னு சொன்னவங்க ஒன்னு ஞாபகம் வச்சிக்கோங்க – வைரலான மீம்களை தொடர்ந்து ஜெயிலர் மருமகள் போட்ட பதிவு.

0
1852
Mirnaa
- Advertisement -

தன்னை பெண் கேட்டு வருவது போன்ற மீம்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து பதில் அளிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன். தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளம் முழுவதும் ஹாட் டாபிக்கே ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான். தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். அதோடு இந்த படத்தில் நடித்த பலரை பற்றியும் சமூக வலைத்தளத்தில் பல வகையான மீம்கள் வெளியாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை பற்றிய பல விதமான மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் இவரை பெண் கேட்டு வருவது போல மீம்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த மீம்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிர்னா பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘பொண்ணு பாக்க வரேன்னு சொல்றவங்க ஒன்னு ஞாபகம் வச்சிகோங்க, என் மாமனாரின் பெயர் டைகர் முத்துவேல் பாண்டியன்’ என்று கூறிஒபிட்டுள்ளார்.

மிர்ணா, இவர் மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி இருக்கிறார். மேலும், ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருப்பதால் மிர்ணாவுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. தற்போது இவர் ஜெயிலர் படத்தின் மூலம் மிர்னா என்று பிரபலமாகி இருந்தாலும் இவர் இதற்கு முன்னாள் வைத்து இருந்த பெயர் அதிதி மேனன். மேலும், இவருக்கு தமிழ் நடிகர் அபி சரவணனுக்கு ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அபி சரவணன் வேறு யாரும் இல்லை அட்டகத்தி குட்டி புலி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதே போல இவர் பட்டதாரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தான் மிர்னா, அதாவது அதிதி மேனனும் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அபி சரவணன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் அதிதி மேனன்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘பட்டதாரி படத்தின் போது அவருடன் நட்பாக பழகி வந்ததாகவும் பின் அது காதலாக மாறி இரண்டும் பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் அபி சரவணன் கூறுவது பொய் என்று தெரிவித்திருந்தார். மேலும் என்னை திருமணம் செய்து கொண்டதாக அவர் போலியான சான்றிதழ்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து இருக்கிறார் என்றும் கூறி இருந்தார்.

ஆனால், இதுகுறித்து பேசிய அபி சரவணன், நானும் அவரும் கடந்த 3 வருடங்களாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான மேலும் சில ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருந்த நிலையில் அபி மற்றும் அதிதி ஒரு தனி அறையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட வீடியோ ஒன்று வெளியிட்டார். இந்த விவகாரம் பல மாதங்கள் சென்று கொண்டு இருந்த நிலையில் அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என்றும் அதிதி மேனன் தனது பெயரை மிர்னா என்று மாற்றிக்கொண்டு அவரவர் வாழ்க்கையை பார்த்து செல்ல துவங்கிவிட்டனர்.

Advertisement