எனக்கு சிறப்பு நுழைவுச் சீட்டு ஏற்பாடு செய்து தருவார். போய் அமர்ந்து கேட்டு, சிலாகித்து வருவேன். ஆனால் இந்த முறை – ஜேம்ஸ் வசந்தன் பதிவு.

0
1454
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான் பூதாகரம்பாக வெடித்து கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருகிறது. ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்சயால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகினர். மேலும், 5000 முதல் 50000 வரை டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்கு சென்ற பலர் உள்ளே கூட செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், சரிவர நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யாததால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர், கூட்டத்தில் பெண்கள் சிலர் பாலியல் சீண்டலுக்கு ஆளாகினர். ஒரு சிலருக்கு காயம் கூட ஏற்பட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ ரஹ்மான் இசை நிகழ்ச்சி அறிவிப்பு வந்தவுடனே நேரடியாக அவரைத் தொடர்புகொள்வேன். எனக்கு சிறப்பு நுழைவுச் சீட்டு ஏற்பாடு செய்து தருவார். போய் அமர்ந்து கேட்டு, சிலாகித்து, நிறைவுடன் வருவேன். பாராட்டி, பெரிய மின்னஞ்சல் ஒன்று அனுப்புவேன். “உங்கள் மனமார்ந்த நல்ல சொற்களுக்கு நன்றி” என்கிற ஒரு வரி பதில் வரும்.

- Advertisement -

இது வழக்கம். ஆனால் நேற்று அது நிகழ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சிறப்புச் சீட்டுடன் ECR-ஐயும் OMR-ஐயும் மாலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை சுற்றிச்சுற்றி வந்து களைத்ததுதான் மிச்சம். நேரம், எரிபொருள், மன அமைதி எல்லாவற்றையும் இழந்து இரவு 11.30-க்கு வீடு வந்து சேர்ந்தோம். 9 மணியானாலும் பரவாயில்லை. எப்படியாவது உள்ளே போய்விடலாம் என்று கூட இருந்த இரு இளைஞர் ரொம்ப ஆசைப்பட்டதால் பொறுமையுடன் சகித்துக்கொண்டு காரில் அமர்ந்திருந்தேன்.

அவர்கள் தற்செயலாக சமூக ஊடகத்தைப் பார்த்தபோதுதான் நிகழ்ச்சித் திடலில் நடக்கிற குழப்பங்களும், சச்சரவுகளும் எங்களுக்குத் தெரியத் தொடங்கின. நல்ல வேளை நாம் அதற்குள் சென்று சிக்கவில்லை என்று வீடு திரும்பத் தீர்மானித்தோம். நுழைவுச் சீட்டு வாங்கியும் உள்ளே போகமுடியாத பல நூற்றுக்கணக்கானோரும், உள்ளே சென்று பலவித இன்னல்களையும் சந்தித்த ரசிகர்களின் அவலங்களையும் சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளீலும் பார்த்திருப்பீர்கள்.

-விளம்பரம்-

கொஞ்சம் கூட திட்டமிடல் இல்லாமலும் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து வந்த மக்களை விலங்குகள் போலவும் நடத்திய, திறமையற்ற அந்த நிகழ்ச்சி மேலாளர்கள் (Event Management Company-ACTC) ஏமாந்து போய் சலிப்பில் இருக்கிற பொதுமக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நியாயம் கிடைக்க உதவவேண்டும். இதைப்போன்று இனி இந்த நகரத்தில் இன்னொரு முறை நிகழாமலிருக்க வேண்டுமானால், இந்த நிகழ்வில் நடந்த முறைகேடுகளின் காரணமாக ரசிகருக்கு ஏற்பட்ட இழப்புக்கு தக்க ஈடு செய்யப்ப்பட வேண்டும்.

இந்த ACTC நிறுவனம் சமூக ஊடகத்தில் ஏதோ மன்னிப்பு கேட்டு செய்தி போட்டதாக அறிந்தேன். அது சரி, ஆனால் போதாது. இழப்பு ரொம்ப அதிகம். இதில் ரஹ்மான் நிகழ் கலைஞர் மட்டுமே. பெருந்தன்மை காரணமாக அவர் இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டாலும், நிகழ்ச்சி மேலாளர்களாக, ‘இதையெல்லாம் சிறப்பாகச் செய்வோம்’ என்கிற உத்தரவாதத்தின் பேரில் இதை ஏற்று நடத்த முன்வந்த ACTC நிறுவனம்தான் இதற்கு முழுப்பொறுப்பு.

ஆவன செய்வீர்கள் என்று நம்புகிறோம்! இல்லையென்றால் ‘மறக்காது நெஞ்சம்’; ‘மன்னிக்காது நெஞ்சம்’. பி. கு.: என்னளவில் ஒரு சின்ன ஆலோசனை. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு வாங்கியவர்க்கென்று ஒரு நிகழ்ச்சி வழங்க ரஹ்மான் அவர்களும், ACTC-யும் முன்வந்தால் நலம். சிரமந்தான், ஆனால் முடியும். நேரு உள்விளையாட்டரங்கம் போன்ற இடத்தில்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement