விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ – முழு விமர்சனம் இதோ.

0
1453
kadaisivivasayi
- Advertisement -

நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடைசி விவசாயி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க விவசாயம் பற்றியும், அவர்கள் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியாகியுள்ள கடைசி விவசாயி படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

ஒரு கிராமத்தில் வயதான என்ற முதியவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவுமே தெரியாது. காக்கி சட்டையில் யார் வந்தாலும் அவர்கள் மின்வாரிய ஊழியர்கள் என நினைத்துக்கொள்ளும் அளவிற்கு அப்பாவித்தனமான மனிதர். விவசாயத்திற்காக பிறந்தவர் என்றும் சொல்லலாம். இதே கிராமத்தில் யானையை வைத்து வாழ்க்கை நடத்தி வருபவர் யோகி பாபு. அதேபோல் விஜய்சேதுபதி வாழ்க்கையில் மீது எந்த ஒரு ஈடுபாடும் இல்லாத நபராக கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும், விவசாயத்தை பற்றி சொல்லும் விதமாகவும் இந்த படம் அமைந்து இருக்கிறது. ஊரில் மழை இல்லாததால் விவசாயம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் எல்லோரும் வெளியூருக்கு வேலை தேடி செல்கிறார்கள். இதனால் ஊருக்குள் எல்லோருக்குமே ஒரு தொடர்பு விட்டுப் போகிறது. இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. இந்த தடைகள் எல்லாம் எப்படி எதிர்கொண்டார்கள்? கடைசியில் திருவிழா நடந்ததா? இல்லையா? மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? விவசாயம் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு வழக்கம் போல் தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், யோகிபாபு காட்சிகள் மட்டும் படத்தில் குறைவாக இருப்பதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அப்பாவித்தனமான விவசாயி என்பதால் இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் விட்டார். அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. படத்தில் நீதிபதியாக வரும் ரேய்ச்சல் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், சின்ன கதையாக இருந்தாலும் தன்னுடைய திரைக்கதையின் மூலம் மக்களை கவர்ந்து இருக்கிறார் இயக்குனர். படத்தில் காண்பித்து இருக்கும் விவசாயம் காட்சிகள் எல்லாம் அப்படியே நம்மை கிராமத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது என்று சொல்லலாம்.

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்குனர் இயக்கிய மணிகண்டன் இந்த படத்தின் கதையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இந்த படத்துக்கு இவர் இயக்கம் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என அனைத்து வேலைகளையும் கவனித்திருக்கிறார். பொதுவாகவே ஊரில் மழை இல்லாததால் விவசாயம் அழிந்து வரும். இந்த சூழலில் ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து கோயில் திருவிழாக்கள் நடத்துவார்கள். அப்படி நடத்தினால் மழை வரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

அப்படி படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருக்கிறார்கள். மண்பானை செய்வதில் தொடங்கி, அரிசி, திருவிழாவுக்கான இசைக்கருவிகள் என காண்பித்து இருக்கும் அனைத்து விஷயமும் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது. இயற்கையான முறையில் விவசாயம் எப்படி இருக்கிறது ?காலப்போக்கில் எப்படி அது செயற்கை ரசாயன உரங்களாக மாறுகிறது? ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை ஒருவர் எப்படி தொடர்ந்து செய்ய முடியும்?

அப்படி செய்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமில்லாமல் முந்தைய தலைமுறையில் இருக்கும் சாதிய உணர்வை அடுத்த தலைமுறைக்கு எப்படி தெரிகிறது என்பதையும் சொல்லியிருக்கிறார். படத்தில் வட்டார வழக்குகள் பயன்படுத்தி இருப்பது பக்கபலமாக அமைந்திருக்கிறது. விவசாயத்தைப் பற்றியும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் ஒரு அற்புதமான ஒரு சிறந்த படமாக கடைசி விவசாயி அமைந்திருக்கிறது.

நிறைகள் :

விஜய் சேதுபதி, யோகி பாபு, முதியவர் மாயாண்டி ஆகியோர் தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது படத்துக்கு படத்துக்கு பலம் என்றே சொல்லலாம்.

படத்தின் கதை, திரைக்கதை கொண்டு சென்ற விதம் அனைத்தும் அருமையாக உள்ளது.

விவசாயத்தைப் பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் இயக்குனர் அழகாக சொல்லி இருக்கிறார்.

இயற்கையான முறையில் விவசாயம் செய்வது பற்றியும், அதில் எப்படி செயற்கை ரசாயன உரங்கள் வந்தது என்பதையும் காண்பித்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் பார்க்கும் படமாக கடைசி விவசாயி இருக்கிறது.

குறைகள் :

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

யோகிபாபு உடைய காட்சிகள் இன்னும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இன்னும் சில இடங்களில் அழுத்தம் கொடுத்திருந்தால் சூப்பராக அமைந்திருக்கும்.

இறுதி அலசல்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது. பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் படமாக கடைசி விவசாயி அமைந்திருக்கிறது. அதோடு பொழுதுபோக்கு படமாகவும், விவசாயி உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையிலும் இந்த படம் உள்ளது என்று சொல்லலாம்.

மொத்தத்தில் கடைசி விவசாயி – என்றும் தோல்வி இல்லை.

Advertisement