குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கம் தான் குய்கோ. இந்தப் படத்தை டி அருள் செழியன் இயக்குகிறார். இந்த படத்தில் விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஎஸ் டி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அந்தோணி தாசன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் கிராமத்தில் மாடு மேய்க்கும் மலையப்பனுக்கும், முத்துமாரியும் காதலிக்கிறார்கள். ஆனால், மலையப்பனின் வேலையை காரணமாக காட்டி முத்துமாரியின் அண்ணன் பெண் கொடுக்க மறுக்கிறார். இதனால் வேலைக்காக மலையப்பன் துபாய் செல்கிறார். அங்கு அவர் ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்கிறார். பின் அவர் பணம் சம்பாதித்து வசதி வாய்ப்போடு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மலையப்பனின் தாய் இறந்து விடுகிறார்.
இதனால் மலையப்பன் துபாயிலிருந்து தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வருகிறார். ஆனால், வேலை காரணமாக விதார்த் துக்க வீட்டிற்கு வருகிறார். விதார்த் வந்த பிறகு மலையப்பன் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை நகைச்சுவை பாணியில் எதார்த்தமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தின் டைட்டில் குய்கோ என்பது அனைவருடைய கதாபாத்திரத்தையும் மையமாக வைத்து இயக்குனர் சொல்லி இருக்கிறார். மலையப்பனாக யோகி பாபு நடித்திருக்கிறார்.
இவர் ஒன் மேன் ஆர்மியாக மொத்த படத்தையும் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். துபாயில் வேலை பார்ப்பவர் என கெத்தாக காட்டுவது, இறந்த தன் தாயை நினைத்து உருகுவது, காதலியை நினைத்து வருத்தப்படுவது என அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக கொடுத்து இருக்கிறார். அதேபோல் விதார்த்துக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அவர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இவர் அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இடைவெளிக்கு பிறகு தான் யோகி பாபு உடைய காட்சிகள் அறிமுகமாகிறது. இதனால் முதல் பாதி முழுவதும் பொறுமையாக நகருகிறது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்று இருக்கிறது. குறிப்பாக, வசனங்களும், காமெடி காட்சிகளும் நன்றாக இருக்கிறது. முதல் படமாக இருந்தாலும் இந்த படத்தை இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. ஹீரோ, ஹீரோயினிக்கு என்ற கதை இல்லாமல் ஒரு எதார்த்தமான கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் குய்கோ படம் ஒருமுறை சென்று பார்க்கலாம்.
நிறை:
யோகி பாபு நடிப்பு சிறப்பு
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை சேர்த்து இருக்கிறது.
இரண்டாம் பாதியில் நன்றாக இருக்கிறது
காமெடி காட்சிகள் ஓகே
கதைக்களம் ஓகே
குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் தேவையில்லாத வசனங்கள்
மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதான குறைகள் இல்லை
மொத்தத்தில் குய்கோ- தியேட்டர் சென்று பார்க்கலாம்.