இரண்டு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் மறைந்த நடிகர் ராஜசேகரின் குடும்பம்.

0
35582
rajasekar-wife
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராஜசேகர். ராஜசேகர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர்,ஒளிப்பதிவாளர் ஆகவும் பணியாற்றியுள்ளார். பின் இவர் சின்னத்திரையில் நடிகராகவும் நடித்துள்ளார். மேலும்,இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகர் ராஜசேகருக்கு சில நாட்களாகவே உடல்நிலை குறைபாடு இருந்த காரணத்தினால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜசேகர் அவர்கள் 2019 செப்டம்பர் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இந்நிலையில் நடிகர் ராஜசேகர் மறைந்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. மேலும், அவர் இறப்பதற்கு முன் அவருடைய ஆசையை பற்றியும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு இருந்த கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று அவர் மனைவி தாரா வருத்தத்துடன் கூறினார்.

-விளம்பரம்-
Image result for tamil actor rajasekar"

- Advertisement -

அது என்னவென்றால் நான் இறப்பதற்குள் சொந்த வீட்டில் ஒரு நாளாவது வாசித்து விட வேண்டும் என்பது தான் ராஜசேகரின் கடைசி ஆசை. மேலும், அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கினார். ஆனால், அந்த வீடு சம்பந்தமான பத்திரப்பதிவு உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாக நடந்தது. மேலும், அந்த வீட்டில் குடியேறாமலேயே இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மட்டுமே சில மணி நேரம் அந்த வீட்டில் வைக்கப்பட்டு எடுத்து சென்றது. மேலும், உறவுகளின் ஆதரவு இல்லாத நிலையில் தனி மனுஷியாக இருக்கிறார் தாரா. தற்போது அவர் எப்படி இருக்கிறார்? அவருடைய நிலை என்ன என்று என்று பார்க்கலாம்.. மேலும்,இதுகுறித்து தாரா அவர்களிடம் பேசியபோது அவர் கூறியது, என் கணவர் ராஜசேகர் நன்றாக சம்பாதிக்கும் திறமை இருந்தும் ஆசை இல்லாத மனிதனாக வாழ்ந்து விட்டு போயிட்டாரு.

இதையும் பாருங்க : விஜய் சார் ஏன் இல்ல. ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு விஜயா ப்ரோடக்க்ஷன் சொன்ன பதில்.

எங்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லை என்றாலும் அவருடன் இருந்த வரையும் நான் ரொம்ப சந்தோஷமாக தான் வாழ்ந்தேன். மேலும், நாலு காசு சேர்த்து வைக்கலை என்று அவரை திட்ட கூட எனக்கு தோணவில்லை. அந்த அளவு என் மேல் பிரியமாக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தை கவலையோடு வாழ்ந்து கழிக்கக் கூடாது என்று அடிக்கடி சொல்லுவார். மேலும், அவர் கடைசி காலத்தில் என்னைப் பத்தின கவலை அவருக்கு வந்தது. அதனால் தான் லோன் போட்டு 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கினார். பாதி தொகைக்கு மேல் கட்டி முடித்து விட்ட நிலையில் திடீரென்று இறந்துவிட்டார். அவர் இறப்புக்கு பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. மேலும், 30 வருஷமாக வீட்டை விட்டு வெளி உலகம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் என்னை வைத்து விட்டார்.அவர் நடித்த தொடர்களிடம் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு உள்ளேன்.

-விளம்பரம்-
Image result for tamil actor rajasekar"

ராஜசேகர், தாரா
நடிகர் ராஜசேகரின் மனைவி

மேலும், வாய்ப்பு தந்தால் எனக்கு வீட்டு பிரச்சினை தீருமா? என்று தெரியவில்லை. ஆனால், வீட்டில் அடைந்து கிடைக்கிற அழுத்தம் குறையலாம். ஆனால், அது கிடைக்க வில்லை என்றால் அடுத்த வழி எங்கேயாவது சென்று வீட்டு வேலை செய்ய வேண்டியது தான். இப்படி செய்தால் தான் சாப்பாட்டுக்கு தீர்வு செய்ய முடியும். இப்படி இருக்கும் நிலையில் மாதம் மாதம் இ.எம்.ஐ கட்ட நான் எங்கே போவேன். இந்த நிலையில் இரண்டு மாதங்களாக கடன் கொடுத்த பேங்கில் இருந்து பத்து தடவைக்கு மேல் வந்துட்டு இருக்கார்கள். அது மட்டுமில்லாமல் உங்க பெயரில் தான் வீடு இருக்கு. அதனால் யோசித்து ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்றும் சொல்லி இருக்கார்கள். நான் என்ன சொல்வது ?எ ன்று எனக்கு தெரியவில்லை.

Image result for tamil actor rajasekar"

ஒவ்வொரு நாளும் நான் கஷ்டத்தோடு தான் விழிக்கிறேன். படுத்தால் தூக்கம் கூட வரவே இல்லை. இந்த பிரச்சினையை வெளியில் சொல்ல எனக்கு ரொம்ப கஷ்டமாக மன வேதனையாக இருக்கு. 15 நாட்களாகவே நான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் தான் சாப்பிடுகிறேன். இப்படி இருக்கும்போது வீட்டை விற்றுவிட்டு கடனையெல்லாம் அடைத்து விட்டு எங்கேயாவது போய் இருக்கலாம் என நினைத்தால் வீடு அவரோட கடைசி ஆசை என்ற எண்ணம் திரும்பத் திரும்ப வருகிறது. மேலும், வீட்டை விற்று கடனை கட்ட தான் சரியாக இருக்கும். என்ன செய்வது என்று தெரியவில்லை. மொத்த பாரத்தையும் கடவுள் மேல போட்டு விட்டு உட்கார்ந்து இருக்கேன் என்று நெஞ்சை உலுக்கும் அளவுக்கு தாராவின் குமுறல் இருந்தது.

Advertisement