30000 தியேட்டர், விஜய் மீட்டிங், ஸ்பெஷல் ஷோ- லியோ படத்தின் அப்டேட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.

0
1320
- Advertisement -

லியோ படம் குறித்து தயாரிப்பாளர் லலித் அளித்திருக்கும் புதிய அப்டேட் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணம் கருதி இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து லியோ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி இருந்தது. தற்போது டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

லியோ படம் :

இந்நிலையில் லியோ படம் குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் கூறியிருப்பது, ட்ரெய்லரை எடிட் செய்யும்போது லோகேஷ் உடன் நானும் இருந்தேன். அப்போ விஜய் சார் கால் பண்ணி ட்ரெய்லர் எப்படி இருக்கு என்று கேட்டார். நாங்கள் டிரைலரை எடிட் பண்ணி அவருக்கு அனுப்பி வைத்தோம். விஜய் சார் ட்ரெய்லரை பார்த்து விட்டு ஓகே நல்லா இருக்கு என்று சொன்னார். காஷ்மீரில் 41 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர் ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்தார்கள். மைனஸ் டிகிரியில் எல்லோருமே வேலை பார்த்தார்கள்.

லியோ படம் தயாரிப்பாளர் சொன்ன தகவல்:

அதனால் தான் பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தோம். குறிப்பாக, அந்த ஹைனா மிருகத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சார் 1000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மத்தியில் எதுவுமே இல்லாமல் ஹைனா இருப்பதுபோல் கற்பனை செய்து நடிப்பார். அதெல்லாம் பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது. அதற்குப்பின் கிராப்பிக்ஸில் தான் ஹைனா மிருகம் சேர்க்கப்பட்டது. விஜய் சார் இந்த படத்திற்காக ரொம்பவே கடுமையாக உழைத்திருக்கிறார். லோகேஷ், படக்குழுவினர், விஜய் சார், பணியாளர்கள் எல்லோரும் அந்த கடும் குளூரில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதனால் படம் சூப்பராக வந்திருக்கிறது. படம் வெளியாகும் போது உங்களுக்கே தெரியும்.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

படத்தை நாங்கள் பார்த்துவிட்டோம். விஜய் சாரும் பார்த்துவிட்டார். எல்லோருக்குமே முழு திருப்தியாக இருக்கிறது. லியோ லோகேஷ் எல்சி யூ வில் இணையுமா? என்பதை படத்தில் சஸ்பென்ஸ் ஆக கடைசிவரை வைத்திருக்கிறோம். படம் பார்த்து எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள். படத்தின் முதல் பாதி பின்னணி இசை வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. அனிருத் எப்போது போலவே பயங்கரமாக மியூசிக் போட்டு இருக்கிறார். இரண்டாம் பாதிக்கான வேலைகள் தொடங்கியிருக்கிறது. அக்டோபர் 10ஆம் தேதிக்குள் எல்லா வேலைகளும் முடிந்துவிடும்.

படம் குறித்த அப்டேட்:

தமிழ்நாட்டில் ஏராளமான திரையில் லியோ படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.
உலகம் முழுவதும் 25000-30,000 திரையரங்கில் படம் வெளியிட இருக்கிறோம். லியோ படம் குறித்த அப்டேட்டுகள் இன்னும் நிறைய வந்து கொண்டே இருக்கும். மேலும், காலை 4:00 மணி காட்சிக்காக அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். பிரீமியர் ஷோ எதுவும் கிடையாது. இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை அதனால் படம் ரிலீசுக்கு முன்னால் ரசிகர்களுக்காக ஏதாவது பேச முடியுமா என்று விஜய் சாரிடம் கேட்டுப் பார்க்கிறேன். இந்த முறை பங்களாதேஷிலும் லியோ வெளியாகும். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்.

Advertisement