அடேங்கப்பா அஜித்துக்கு காவல் துறை கூட ரசிகர் தான்.! தல கெத்துதாங்க.!

0
418
Viswasam

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். பொதுவாக அஜித்தின் படங்கள் வந்தாலே அது அவரது ரசிர்கர்களுக்கு ஒரு திருவிழா தான். இன்னும் ஒரு வாரத்தில் விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கிறது.

ஒன்றரை வருடம் கழித்து தல தரிசனத்தை காண உள்ளனர் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகின்றனர். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் என்று அனைத்தும் இணையத்தில் சக்க போடு போட்டு வருகிறது.

விஸ்வாசம் திரைப்படம்
துரை சுற்றுவட்டார கதையை கொண்டே திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளமை மேலும் சிறப்பு. இதனால் மதுரை அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

அதே போல அஜித்திற்கு அரசு ஊழியர்களும் ரசிகர்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று மதுரை மாவட்ட காவல் மக்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டையலாக் போல புகைப்படத்துடன் செய்தி அனுப்பியுள்ளார்கள்.