யாஷிகா இல்லையாம்..!தற்போது ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்த மஹத்..!

0
96
Mahathaiswarya

நடிகர் நகுலுக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. தமிழில் ‘பாயும் புலி’, ‘அச்சாரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிதாக அறியப்படாத நடிகையாகவே இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்துள்ளது.

aiswarya

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், இறுதி போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தை தட்டி சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சிம்பு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது மஹத்-ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் மஹத் வடசென்னை வாலிபராகவும், ஐஸ்வர்யா பணக்கார வீட்டு பெண் போலவும் நடிக்கிறார்களாம்.

புதுமுக இயக்குனர் பிரபு ராம் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் ரொமான்டிக் காமெடி படமாக எடுக்கப்பட உள்ளதாகவு இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.