அப்போ Gp முத்துக்கு பதில் மன்சூர் அலிகானா ? அவரிடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கும் பிக் பாஸ் குழு. அவரே சொன்ன வீடியோ இதோ.

0
408
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து விலகிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவிய வருகிறது. இந்த சீசனில் ஜிபி முத்து கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் ஜி முத்து நிட்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜிபி முத்து. கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார்.

-விளம்பரம்-
gpmuthu

அவரை பிக் பாஸும் அழைத்து எத்தனையோ சமாதானம் செய்தார். ஆனாலும், தனக்கு தன் பிள்ளை நினைவாகவே இருக்கிறது நான் போய்தான் ஆக வேண்டும் என்று தன் முடிவில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கூட கமல, ஜிபி முத்துவிடம் இந்த நிகழ்ச்சியால் எந்த அளவு புகழ் வரும் என்பது உங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால், எனக்கு புகழ் பணத்தை விட என் பிள்ளை தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

- Advertisement -

ஜிபி முத்துவின் இந்த முடிவை கண்டு கமலே ஒரு கணம் நெகிழ்ந்துபோனார். ஜிபி முத்து வெளியேறியதை தொடர்ந்து அவரின் வெளியேற்றம் குறித்து கமல் போட்டியாளர்களிடன் அறிவித்த போது ஒரு பலமான போட்டியாளரை வெளியில் அனுப்பி விட்டோம் என்ற சந்தோஷத்தை விட ஒரு பாசம் உள்ள தந்தையை வெளியே அனுப்பி வைத்திருக்கிறோம் என்று சந்தோஷப்படுவோம்.’ என்று கூறி இருந்தார்.

இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார். ஜிபி முத்து வெளியேறியதால் தற்போது அவருக்கு பதில் யார் கலந்துகொள்ளப்போவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக மாஸ் போட்டியாளரை களமிறக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகானிடம் பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்க்கு பதில் அளித்த அவர் ‘பிக் பாஸ்க்கு என்னை கூப்பிட்டாங்க நான் ஒரு சம்பளம் கேட்டேன் அங்கு என்னவோ ஆம்பளை வேஷம் போட சொல்லுவாங்களாம், பொம்பள வேஷம் போட சொல்லுவாங்களாம், பாட்டு பாடணுமா இதெல்லாம் நாம் பண்ணி விடுவோம். சினிமாவில் பண்றத அங்க போய் பண்ண போறோம். அதற்கு நான் ஒரு பணம் கேட்டேன் அத்தோடு அவர்கள் பேச்சை நிப்பாட்டி விட்டார்கள்.

நான் கேட்கும் பெரிய சம்பளத்தை கொடுத்தால் அங்கு போய் நடிக்கப் போகிறேன் அவ்வளவுதான். அப்போது உள்ளே இருக்கும் அனைவரும் நடிக்கிறார்களா என்று கேள்வி கேட்கப்பட்டபோது ‘ஒரு ரூமுக்குள் 10 பேரை விட்டால் என்ன செய்வார்கள். அப்போது அதை தானே நானும் செய்யப் போகிறேன். பிக் பாஸ் பற்றி குறை செல்பவர்கள் எதற்காக நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள். டிவியை மாற்றிவிட்டு வேறு சேனலை பார்க்க வேண்டியதுதானே. அவன் பிக்பாஸ் நடத்துறான், அவன் சம்பாதிக்கிறான், அவன் என்னமோ செய்கிறான் நீங்கள் ஏன் அதை பார்க்கிறீர்கள் வேறு ஏதாவது சேனலை பாருங்க’ என்று கூறியுள்ளார்.

Advertisement