அயர்ன் மேன் இப்படி சொன்னதால்தான் நான் ஹல்க் கதாபாத்திரத்தில் நடித்தேன்” – ஹல்க் நடிகர் பேட்டி.

0
2619
hulk
- Advertisement -

கோலிவுட், பாலிவுட் படங்களை விட உலக அளவில் புகழ் பெற்ற படங்களாக திகழ்வது ஹாலிவுட் படங்கள் தான். அந்த வகையில் மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படங்களுள் ஒன்றாக ஹல்க், அவெஞ்சர்ஸ் மற்றும் தோர் திகழ்கிறது. இந்தப் படங்களில் ஹல்க் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் மார்க் ரஃபல்லோ.
இவர் தார் ராக்னராக் உட்பட 5 படங்களில் ஹல்க் / ப்ரூஸ் பேனர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் மார்க் ரஃபல்லோ அவர்கள் ஹல்க் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, முதலில் நான் சிறு சிறு படங்களில் தான் நடித்து வந்தேன். அப்போது தான் ஹல்க் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. முதலில் நான் இந்த படத்தில் நடிக்க சரியாவனா? தவறாவனா என்பது எனக்கு தெரியவில்லை. மேலும், முதலில் நான் பயந்தேன். அதோடு எனக்கு தயக்கமாகவும் இருந்தது.

- Advertisement -

பிறகு இயக்குனர் ஜாஸ் வீடன் அவர்கள் நீங்கள் சரியான நபர் தான் என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். பிறகு ராபர்ட் டவுனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் என்னிடம் இதை கண்டிப்பாக செய்வோம் என்று எனக்கு உறுதுணையாக நம்பிக்கை அளித்தார். அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் அயன் மேன் சொல்வது போலவே உற்சாகப்படுத்தியது.

அதற்குப் பிறகு தான் நான் சரி என்று ஹல்க் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார். சமீபத்தில் கூட ஹல்க் பற்றி தனியாக ஒரு கதை எடுக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறதாக தகவல் வெளியானது. மார்க் ரஃபல்லோவும், ராபர்ட் டவுனி ஜூனியரும் 2007 ஆம் ஆண்டே ‘ஸோடியாக்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement